Published:Updated:

'குஜராத் தேர்தலுக்குப் பின் ஜி.எஸ்.டி-க்கான மக்கள் ஆதரவு தெரியும்' - அருண்ஜெட்லி!

'குஜராத் தேர்தலுக்குப் பின் ஜி.எஸ்.டி-க்கான மக்கள் ஆதரவு தெரியும்' - அருண்ஜெட்லி!
'குஜராத் தேர்தலுக்குப் பின் ஜி.எஸ்.டி-க்கான மக்கள் ஆதரவு தெரியும்' - அருண்ஜெட்லி!

'குஜராத் தேர்தலுக்குப் பின் ஜி.எஸ்.டி-க்கான மக்கள் ஆதரவு தெரியும்' - அருண்ஜெட்லி!

ஜி.எஸ்.டி அமல்படுத்தியதற்கு மக்களின் ஆதரவை குஜராத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருக்கிறார்.

சர்வதேச நிதியமான ஐ.எம்.எஃப் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்தார். இந்தியாவில், கடந்த ஜூலை முதல் தேதியிலிருந்து நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பான சரக்கு மற்றும் சேவை வரி - ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துவிட்டதாகப் பல்வேறு தரப்பினரும் குறைகூறிவரும் நிலையில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகத் தொடர்ந்து கூறிவருகிறார்.

இந்நிலையில் அவர், 'பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் நடைபெற்ற உத்தரப்பிரதேச தேர்தலில், பி.ஜே.பி சிறப்பான வெற்றியைப் பெற்றது என்றும், அதேபோல ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், விரைவில் நடைபெறவிருக்கும் குஜராத் சட்டசபைத் தேர்தலில் பி.ஜே.பி வெற்றிபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஜி.எஸ்.டி-க்கு மக்களின் ஆதரவு தெரியவரும் என்றும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

முந்தைய ஆட்சியில் நீடித்த நிழல் பொருளாதாரத்தை ஒழிக்கும் வகையிலேயே பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், ஜி.எஸ்.டி-யைக் கொண்டுவர வேண்டும் என்று முதலில் வலியுறுத்தியது காங்கிரஸ்தான்; ஆனால், தற்போது ஒரே மாதிரியான வரிமுறை அமலுக்கு வந்ததும் அதை எதிர்க்கிறது' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு