Published:Updated:

தாஜ்மஹாலுக்கு விசிட் அடிக்கும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தாஜ்மஹாலுக்கு விசிட் அடிக்கும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்!
தாஜ்மஹாலுக்கு விசிட் அடிக்கும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்!

தாஜ்மஹாலுக்கு விசிட் அடிக்கும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ந்தியர்களின் ரத்தத்தாலும் வியர்வையாலும் தாஜ்மகால் கட்டப்பட்டுள்ளது. யார் என்ன காரணத்துக்காக அதைக் கட்டியிருந்தாலும் சுற்றுலாத்துறையின் முக்கிய அங்கம் தாஜ்மஹால் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். 

சமீபத்தில், சுற்றுலா கையேட்டிலிருந்து தாஜ்மஹாலை நீக்கியது உ.பி அரசு. பாரதிய ஜனதா கட்சியின் சர்தான் தொகுதி எம்.எல்.ஏ சங்கீத்சாம்' தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது, அடிமைத்தனத்தின் அடையாளம், இந்தியக் கலாசாரத்துக்கு விரோதமானது 'என்று பேசியுள்ள நிலையில், ஆதித்யநாத் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, ஆக்ராவின் சுற்றுலாத் தளங்களை மேம்படுத்தும் வகையில், ஆக்ராவில் ஆதித்யநாத் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளவுள்ளார். அக்டோபார் 26-ம் தேதி ஆக்ரா கோட்டை, பதேபூர் சிக்ரி கோட்டை, தாஜ்மஹால் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை அவர் பார்வையிடுகிறார். ''சுற்றுலாப்பயணிகளுக்கு வேண்டிய வசதிகளையும் பாதுகாப்பையும் அளிப்பது தம் அரசின் கடமை '' என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

'முகலாயர்கள் வரலாற்றை மாணவர்களுக்குச் சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் அனைவரும் கொள்ளையர்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வாக சிப்பாய்க்கலகத்தைத் துவக்கிய மங்கள் பாண்டேவுக்கு கர்னல் பகதூர் ஷா துணையாக இருந்தார் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்கள் செய்யவில்லை. இந்தியாவின் கலாசாரத்தைப் பாடமாகச் சொல்லிக்கொடுக்கும்போது தந்தையைப் பதவிக்காக மகன் கொல்வதும் கலைநுணுக்கம் மிகுந்த தாஜ்மஹால் கட்டடத்தைக் கட்டிய கலைஞர்களின் கரங்களை வெட்டிய வரலாற்றைச் சொல்லிக்கொடுக்க விரும்பவில்லை' என உ.பி. துணை முதல்வர் தினேஷ் சர்மா கூறியிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு