Published:Updated:

திருப்பூர்,புதுக்கோட்டை ஆட்சியர்கள் உள்ளிட்ட 23 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

திருப்பூர்,புதுக்கோட்டை ஆட்சியர்கள் உள்ளிட்ட 23  ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!
திருப்பூர்,புதுக்கோட்டை ஆட்சியர்கள் உள்ளிட்ட 23 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!
திருப்பூர்,புதுக்கோட்டை ஆட்சியர்கள் உள்ளிட்ட 23  ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

சென்னை: சென்னை, திருப்பூர்,புதுக்கோட்டை,கிருஷ்ணகிரி,கரூர் மாவட்ட ஆட்சியர்கள்  உள்ளிட்ட   23  ஐஏஎஸ் அதிகாரிகள் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ள்னர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "சென்னை  மாநகராட்சியின் சுகாதார துறை இணை கமிஷனராக பணிபுரியும் பூஜா குல்கர்னி  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிராமபுற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குனர் ஜி.கோவிந்தராஜ்  திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரியும் எ.மதிவாணன் கிராமபுற வளர்ச்சி  மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குனராகிறார்.கூட்டுறவு சங்கங்களின் கூடுதல்  பதிவாளர் சி.மனோகரன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருக்கும் கலையரசி கூட்டுறவு சங்கங்களின்  கூடுதல் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியராக பணிபுரியும்  எஸ்.ஜெயந்தி கரூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சி.என்.மகேஸ்வரன் சென்னை மாநகராட்சியின்  சுகாதாரதுறை இணை கமிஷனராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாசு  கட்டுப்பாடு வாரிய தலைவரும், முதன்மை செயலாளருமான விக்ரம் கபூர் தொழிற்சாலை  துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பதவி வகித்த டாக்டர்  என்.சுந்தரதேவன் பணி ஓய்வு பெறுகிறார்.

போக்குவரத்து கமிஷனராக இருந்த டாக்டர் பி.செந்தில்குமார் சுகாதாரம் மற்றும்  குடும்பநல துறை சிறப்பு செலயாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அரசின் சிறப்பு திட்ட  செயலாக்கதுறை செயலாளராக பணிபுரியும் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் சுகாதாரம்  மற்றும் குடும்பநல துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். தொழிற்சாலைகள் துறை  இணை செயலாளர் ஜி.பிரகாஷ் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சர்க்கரை கார்பரேசன் மானேஜிங் டைரக்டரும், சர்க்கரை துறை இயக்குனரான  என்.மதிவாணன் தொழிற்சாலைகள் துறை இணை செயலாளாராக மாற்றப்பட்டுள்ளார்.  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனராக பணிபுரியும் மகேசன் காசிராஜன் தமிழ்நாடு  சர்க்கரை கழக நிர்வாக இயக்குனர் மற்றும் மற்றும் தலைவராகவும் பணி நியமனம்  செய்யப்பட்டுள்ளார்.

சமூக நலத்துறை இயக்குனராக பணிபுரியும் பி.ஜோதிநிர்மலா தமிழ்நாடு மாநில தேர்தல்  ஆணைய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாநில தேர்தல்  ஆணைய செயலாளராக இருக்கும் வி.எம்.சேவியர் கிறிஸ்கோ நாயகம் சமூக நலத்துறை  செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி தெற்கு மண்டல துணை ஆணையராக இருந்த வி.மோகன்ராஜ்  போக்கு வரத்து துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநில திட்ட  கமிஷனர் செயலாளர் அனில் மேஷ்ரம் வேளாண் மார்க்கெட்டிங் மற்றும் வேளாண்  வர்த்தக இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். இந்து அறநிலைய துறை கமிஷனராக இருந்த  ஜெ.சந்திரகுமார் நில சீர்திருத்த துறை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விருது நகர் மாவட்ட கலெக்டராக இருந்த எம்.பாலாஜி மாநில திட்ட கமிஷன் உறுப்பினர்  செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிறு தொழிற் சாலைகள் வளர்ச்சி  கார்ப்பரேசன் மானேஜிங் டைரக்டர் மற்றும் தலைவர் மற்றும் முதன்மை செயலாளராக  பணிபுரியும் ஹன்ஸ்ராஜ் வர்க குரு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் துறை  முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொது மற்றும் மறுவாழ்வு துறை செயலாளர் குமார் ஜெயந்த் தமிழ்நாடு எய்ட்ஸ்  கட்டுப்பாடு வாரிய திட்ட இயக்குனர் மற்றும் உறுப்பினர் செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரிய திட்ட இயக்குனரும்,  உறுப்பினர் செயலாளருமான சித்தரஞ்சன், மோகன் தால் பொது மற்றும் மறுவாழ்வு  துறை செயலாளராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.