அப்பீல் மேல் அப்பீல்! 20 ஆண்டுகளாக நடந்த கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி | After 20 years, the court ruled by the court

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (30/10/2017)

கடைசி தொடர்பு:15:05 (30/10/2017)

அப்பீல் மேல் அப்பீல்! 20 ஆண்டுகளாக நடந்த கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி

கொலை வழக்கில் 20 வருடங்களுக்குப் பிறகு, 8 பேரை கைதுசெய்திருக்கிறது ஜெயங்கொண்டம் போலீஸ். 

cuddalore
 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வரதராஜன்பேட்டையைச் சேர்ந்தவர், மைக்கேல். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த எட்வர்ட் என்பவருக்கும் இடையே, 1997-ம் ஆண்டு பஞ்சாயத்துத் தேர்தலிலும் மைக்கேலின் பாட்டி இடப்பிரச்னையிலும் முன்விரோதம் இருந்துவந்தது. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.  இடத்துக்கு, நீதிமன்றத்தில் மைக்கேலுக்கு ஆதரவாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் கடுப்பான எட்வர்டின் ஆதரவாளர்கள், மைக்கேலை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மைக்கேல், மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், கடந்த 1997-ம் ஆண்டு இறந்துவிட்டார். இதுகுறித்து மைக்கேலின் மனைவி ஜெசிந்தா, ஆண்டிமடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் பெரம்பலூர் முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், 2002-ம் ஆண்டு எட்வர்ட் உள்ளிட்ட ஆதரவாளர்கள் 10 பேரை குற்றவாளிகளாக உறுதிசெய்தது நீதிமன்றம். எட்வர்ட் ஆதரவாளர்கள் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். அங்கும் இதே தீர்ப்பு உறுதியானது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். அங்கும் கீழ்கோர்ட் அளித்த தீர்ப்பை  உச்ச நீதிமன்றமும் உறுதிசெய்தது. இதையடுத்து, பெரம்பலூர் முதன்மைக் குற்றவியல் நீதிபதி எட்வர்ட் தரப்பினரைக் கைதுசெய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தார். ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் நித்தியா, வழக்கில் தொடர்புடைய வரதராஜன் பேட்டையைச் சேர்ந்த பெரியநாயகசாமி, சின்னப்பன், அல்போன்ஸ், கிரிகோரி, ஆரோக்கியராஜ், அமிர்தம், ஜோசப், அந்தோணிசாமி ஆகியோரை கைதுசெய்து, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் உடல் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, பெரம்பலூர் முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு அழைத்துச்சென்றனர். இவ்வழக்கில் தொடர்புடைய எட்வர்ட், போலீஸ் காவலில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றார்.