Published:Updated:

காவிரி: மத்திய ஆய்வு குழு இன்று தமிழகம் வருகை

 காவிரி: மத்திய ஆய்வு குழு இன்று தமிழகம் வருகை
காவிரி: மத்திய ஆய்வு குழு இன்று தமிழகம் வருகை
 காவிரி: மத்திய ஆய்வு குழு இன்று தமிழகம் வருகை

புதுடெல்லி/சென்னை:காவிரி தொடர்பாக அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பு, திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு, ஆய்வு செய்வதற்காக மத்தியக் குழு இன்று தமிழகம் வருகிறது.

தமிழ்நாட்டில், டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிரை காப்பாற்றுவதற்காக காவிரியில் 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடும்படி, தமிழக அரசு சார்பில் வற்புறுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டு இருந்த வழக்கில், தினசரி வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையம் கூட்டம், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கடந்த 20-ம் தேதி முதல் வருகிற 15-ம் தேதி வரை நாள்தோறும் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடும்படி, கர்நாடக அரசுக்கு பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடக அரசு, கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால் 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற பிரதமரின் உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு மனு அனுப்பி உள்ளது.

இது குறித்து டெல்லியில் மத்திய நீர்ப்பாசன துறை மந்திரி பவன்குமார் பன்சாலிடம் செய்தியாளர்கள் கேட்டபோது,"அது பிரதமரின் உத்தரவு அல்ல. காவிரி ஆணையத்தின் உத்தரவு.எனவே, பிரதமராலோ அல்லது மத்திய அரசாலோ அதை மறு பரிசீலனை செய்ய முடியாது.காவிரி நதி நீர் ஆணையம்தான் அந்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய முடியும்'' என்று தெரிவித்தார்.

##~~##
இந்நிலையில், பிரச்னை தொடர்புடைய மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு பிரதிநிதிகள் பங்கேற்கும் காவிரி கண்காணிப்பு குழு கூட்டம், வருகிற 8-ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த தேதியை உறுதி செய்ய மறுத்த பன்சால், நிச்சயம் 15-ம் தேதிக்கு முன்னதாக இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். 15-ம் தேதிக்குப் பிறகு கர்நாடகம் காவிரியில் திறக்க வேண்டிய தண்ணீரின் அளவு குறித்து இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.
இந்நிலையில், இரு மாநிலங்களிலும் அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பு, திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு, சாகுபடி பயிர்களின் நிலைமை ஆகியவை குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழு ஒன்றை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மத்திய நீர்வளத்துறை செயலாளர் டி.வி.சிங் தலைமையிலான இந்த குழு, இன்று தமிழ்நாட்டிலும், நாளை கர்நாடகத்திலும் சுற்றுப்பயணம் செய்து நிலைமையை ஆய்வு செய்கிறது. இந்த ஆய்வுக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், அடுத்த வாரம் நடைபெற இருக்கும் காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் தண்ணீர் திறந்து விடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.