Published:Updated:

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் திறப்பு!

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் திறப்பு!
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் திறப்பு!
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் திறப்பு!

சென்னை: வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

இதுகுறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கு வகை செய்ய "புதிய வீராணம் திட்டம்'' எனது தலைமையிலான அரசால் 2004-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 

மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடும் போது அந்தத் தண்ணீர் வீராணம் ஏரியில் பெறப்பட்டு, அப்பகுதியின் பாசனத்திற்கு பயன்படுவதோடு  மட்டுமல்லாமல், சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்திச் செய்யும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.

காவேரி டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு கடந்த மாதம் 17-ஆம் தேதி முதல் காவேரியிலிருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட நான் உத்தரவிட்டிருந்தேன். தற்போது,மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதன் காரணமாகவும், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருவதன் காரணமாகவும், வீராணம் ஏரியில் 45.80 அடி தண்ணீர் உள்ளது. 

எனவே, வீராணம் ஏரியிலிருந்து  23-ந்தேதி முதல் சென்னை மாநகர குடிநீருக்காக நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் திறந்து விட நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் கிடைக்க வழிவகை ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.