Published:Updated:

பத்திரிகையாளர் மீது தாக்குதல்:விஜயகாந்த் முன் ஜாமீன் கோரி மனு!

பத்திரிகையாளர் மீது தாக்குதல்:விஜயகாந்த் முன் ஜாமீன் கோரி மனு!
பத்திரிகையாளர் மீது தாக்குதல்:விஜயகாந்த் முன் ஜாமீன் கோரி மனு!
பத்திரிகையாளர் மீது தாக்குதல்:விஜயகாந்த் முன் ஜாமீன் கோரி மனு!

சென்னை: பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக தேமுதிக தலைவர்  விஜயகாந்திற்கு எதிராக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள  நிலையில்,முன் ஜாமீன் கோரி விஜயகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்துள்ளார்.

கடந்தவாரம்,முதலமைச்சர் ஜெயலலிதாவை தேமுதிக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து  சந்தித்து பேசியது குறித்து,விஜயகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது,  அவருக்கும் தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம்  ஏற்பட்டது.

இதில் அந்த நிருபர் கீழே தள்ளி விடப்பட்டார்.இதுகுறித்து அந்த தனியார் தொலைக்காட்சி  நிருபர் மீனம்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து விஜயகாந்த் மீது கொலை மிரட்டல் 506 (2) தரக்குறைவாக பேசுதல்  (294 பி) தன்னிச்சையாக சிறு காயம் ஏற்படுத்துதல் (323) முறையற்று தடுத்தல்  (341) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

##~~##
இதன் அடிப்படையில் விஜயகாந்த் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இதனையடுத்து விஜயகாந்த் முன் ஜாமீன் கோரி,சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில்,"என்னுடை தனிப்பட்ட வேலை காரணமாக மதுரைக்கு செல்ல  அவசரமாக விமான நிலையம் சென்று கொண்டு இருந்தேன்.விமான நிலையத்தில்  இருந்த பத்திரிகையாளர்கள் அத்துமீறி கேள்வி கேட்டனர்.அவர்களை விலக்கி கொண்டு  உள்ளே சென்றேன்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டு அதன்மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கில் நான் கைது செய்ய நேரிடலாம் என்று  அஞ்சுகிறேன்.எனவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமீன் கொடுக்க வேண்டும்” எனக்  கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.