Election bannerElection banner
Published:Updated:

``முன்னாடி பா.ஜ.க-வுக்கு கசந்த கெயில் திட்டம் இப்போ கரும்பாக இனிக்கும் மர்மம் என்ன?!" - கொதிக்கும் விவசாயச் சங்கங்கள்

``முன்னாடி பா.ஜ.க-வுக்கு கசந்த கெயில் திட்டம் இப்போ கரும்பாக இனிக்கும் மர்மம் என்ன?!" - கொதிக்கும் விவசாயச் சங்கங்கள்
``முன்னாடி பா.ஜ.க-வுக்கு கசந்த கெயில் திட்டம் இப்போ கரும்பாக இனிக்கும் மர்மம் என்ன?!" - கொதிக்கும் விவசாயச் சங்கங்கள்

``முன்னாடி பா.ஜ.க-வுக்கு கசந்த கெயில் திட்டம் இப்போ கரும்பாக இனிக்கும் மர்மம் என்ன?!" - கொதிக்கும் விவசாயச் சங்கங்கள்

         
 

டெல்டாவில் விவசாயத்தை அழித்து ஒழிக்க மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஷேல் கேஸ் எமனாக காத்திருக்கிருக்கின்றன என்றால் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்ட விவசாயத்திற்கு புதைக்குழி வெட்ட காத்திருப்பது கெயில் கேஸ் குழாய் பதிப்புத் திட்டம். கடந்த காங்கிரஸ் அரசில் கொண்டு வரப்பட இருந்த  விளைநிலங்களில் கெயில் கேஸ் குழாய் பதித்து கொண்டு போகும் இந்தத் திட்டத்தை அப்போது விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். விவசாய சங்கங்களும்,பல்வேறு தமிழக கட்சிகளும்,குறிப்பாக அப்போது மத்தியில் எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க கட்சியும்,'விளைநிலங்களை பாழ்படுத்த பார்க்கும் இந்த திட்டத்தை தடை பண்ணனும்" என்று சொல்லி போராடின. 

ஆனால்,ஆட்சி மாறினால்,காட்சியும் மாறும் என்பதுபோல்,அப்போது விவசாயிகளோடு சேர்ந்து இந்த கெயில் குழாய் பதிப்புத் திட்டத்தை எதிர்த்த பா.ஜ.க இப்போது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது. அப்போது எதிர்க்கட்சியா பா.ஜ.க இருந்தப்ப,எங்களோடு சேர்ந்து இந்த கெயில் குழாய் பதிப்பு திட்டத்தை கடுமையாக எதிர்த்தாங்க. ஆனால்,இப்ப அவங்க மத்தியில் ஆளுறதால,அவங்களுக்கு இப்போ அந்த திட்டம் கரும்பாக இனிக்கும் மர்மம் என்ன?" என்று ஏழு மாவட்ட விவசாயிகளும் கொதிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.


 

தாங்கள் எதிர்த்த அதே கெயில் குழாய் பதிப்புத் திட்டத்தை இப்போது மறுபடியும் கொண்டு வர தமிழக பா.ஜ.த தலைமை விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அமைத்திருப்பதுதான் விவசாயிகளை அப்படி கோபப்பட வைத்திருக்கிறது. இதுபற்றி,ஈரோடு தற்சார்பு விவசாயிகள் சங்க நிர்வாகி கி.வே.பொன்னையனிடம் பேசினோம்.


 

"தமிழக அரசால் 2013 ம் ஆண்டே,எங்களின் எதிர்ப்புகளை தொடர்ந்து,பா.ஜ.கவின் எதிர்ப்பை தொடர்ந்து இந்த கெயில் குழாய் பதிப்புத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த கெயில் கேஸ் குழாய் பதிக்கப்பட்டால் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி,தருமபுரி ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். அதனால்,விவசாயிகள் கொத்துக் கொத்தாக சாவார்கள்'ன்னு கடுமையா எதிர்த்தோம். பா.ஜ.கவும் அப்போது எதிர்த்தது. அதனால்,கெயில் குழாய் பதிக்கும் வேலைகளை மக்கள் தடுத்து நிறுத்தினர். அதோடு,தொடர்ந்து இந்த கெயில் குழாய் பதிப்புத் திட்டத்திற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும்,விவசாயச் சங்கங்களும் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுத்து போராட்டங்களில் கலந்து கொண்டன. 2013 ம் ஆண்டு மத்தியில் எதிர்க்கட்சியாக இருந்த பாரதிய ஜனதா கட்சி விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்றது. 

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அறிந்துகொள்ள அன்றைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா,2013 ம் ஆண்டு நடத்திய கருத்துக் கேட்கும் கூட்டத்தில்,ஏழு மாவட்டத்தில் உள்ள கெயில் வழித்தடத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் முறையான அழைப்பு விடுத்து, அனைவரையும் வருவாய்த்துறை மூலம் அழைத்தார். அந்த கூட்டத்தில்,சுமார் 4000க்கும் மேற்பட்ட விவசாயிகளும்,பெண்களும் சென்னைக்குச் சென்று மூன்று நாள்கள் தக்க ஆவணங்களுடம் தங்களது கருத்துகளை தனித்தனியாக பதிவு செய்தனர். இது எழுத்து மூலமாகவும்,வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து,முதல்வருக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவோடு கெயில் திட்டத்திற்கு தடை விதித்து மூடுவிழா நடத்தினார். இவ்வாறு பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் முறைப்படி கருத்தறிந்து தமிழக சட்டப்பேரவையில் அந்த திட்டம் தடை செய்யப்பட்டது. 'இந்த வெற்றியில் தங்களுக்கும் பங்கு இருக்கிறது' என்று அப்போதைய பா.ஜ.க தலைமை பெருமை கொண்டாடியது. ஆனால்,தமிழக அரசால் முடக்கப்பட்ட கெயில் திட்டத்தை எப்படியாவது தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று  அதே பா.ஜ.க இப்போது துடிக்கிறது. மத்திய பா.ஜ.க அரசின் அந்த எண்ணத்தை நிறைவேற்றும் பொருட்டு,தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்,ஒரு குழுவை அமைத்துள்ளார். 'அந்த குழு ஏழு மாவட்ட விவசாயிகளை சந்தித்து பேசி,ஊத்தி மூடப்பட்ட கெயில் திட்டத்தை நிறைவேற்ற பாடுபடும்'ன்னு அறிவிச்சுருக்கார். 


 

அந்தக் குழுவில் உள்ள சிலர் சிலர்,ஏழு மாவட்டத்தில் உள்ள சில விவசாயிகளை தொடர்பு கொண்டு,கெயில் திட்டத்தின் நன்மைகள் குறித்து பிரச்சாரம் செய்து வருவதோடு, அவர்களுக்கு அரசியல் அழுத்தமும் கொடுக்க தொடங்கியுள்ளனர். அப்போது,பா.ஜ.கவுக்கு வேப்பங்காயாக கசந்த இந்த கெயில் திட்டம்,இப்போது கரும்பாக இனிப்பதின் மர்மம் என்ன? இதன் பின்னே அவர்களுக்கு கிடைக்கப்போகும் பொருளாதார ஆதாயம்தான் அதற்கு காரணம். 'கருத்து கேட்கிறேன் பேர்வழி..' என்ற பெயரில் விவசாயிகளைப் பிளவுப்படுத்தும் வேலையை தமிழக பா.ஜ.க தலைமை செய்ய முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த முயற்சியை தமிழக பா.ஜ.க உடனடியாக கைவிட வேண்டும். தங்களுக்கு இசைவாக இருக்கும் தமிழக அரசை கையில் வைத்து,இந்தத் திட்டத்தை அவர்கள் செயல்படுத்திவிடலாம் என்று நினைத்தால்,அது பகல் கனவாகதான் முடியும். எங்களது உயிரை கொடுத்தாவது அவர்களின் அந்த முயற்சியை முடக்குவோம்" என்று  வெடித்து முடித்தார்.       
 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு