தி.மு.க தலைவர் கருணாநிதியுடன் கி.வீரமணி, வைரமுத்து சந்திப்பு!

கருணாநிதி, karunanidhi

2ஜி அலைக்கற்றை வழக்கில் தி.மு.க.,வுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்திருப்பதையொட்டி, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

2ஜி வழக்கு தி.மு.க.,வுக்கு பெரும் தலைவலியைத் தந்துகொண்டிருந்த நிலையில், கனிமொழி, ராசா உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதால் தி.மு.க தொண்டர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும் தி.மு.க தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடிவருகின்றனர். தீர்ப்பு வெளியானதும் கோபாலபுர இல்லத்தில் உள்ள கருணாநிதியை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். இந்த சந்திப்பின்போது பொதுச் செயலாளர் அன்பழகனும் உடன் இருந்தார். இந்நிலையில், நேற்று இரவு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசுவும் உடன் இருந்தார். சந்திப்புகுறித்து பேசிய வைரமுத்து, ‘இந்த தீர்ப்பு திராவிட இயக்கத்தின் மீதான வசையைக் களைந்துள்ளது. தீர்ப்பு ஒரு புதிய வழியைக் காட்டும். ஸ்டாலின் இனி இயக்கத்தை விரிவு படுத்தவேண்டும்.’, என்றார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!