`மக்கள் உங்களை நம்ப மாட்டார்கள்!' - கமலைச் சீண்டும் தமிழிசை

`கஜானாவை நோக்கி நாம் செல்லவில்லை; மக்களை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்' என்று கமல்ஹாசன் சில நாள்களுக்கு முன்னர் கருத்து கூறியிருந்தார். இதை பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்செய்துள்ளார். 

தமிழிசை

சில நாள்களுக்கு முன்னர் ரசிகர்கள் மத்தியில் பேசிய கமல், `தற்போது, நம் இலக்கு சற்று மாறியிருக்கிறது. நாம் கஜானாவை நோக்கிச்  செல்லவில்லை. மக்களின் முன்னேற்றத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். மக்களை நோக்கிச்செல்லும் பயணம் விரைவாக இருக்கும். சாதி, மதம் கடந்த பயணமாக இது இருக்கும். சுவரொட்டியில் எழுதப்படும் வாசகங்களைத் தலைமையின் அனுமதிபெற்று எழுதுங்கள், கண்ணியம் காக்கப்பட வேண்டும்' என்று பேசியிருந்தார். 

இதுகுறித்து தமிழிசை அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், `திரைப்படங்களில் நடித்து உங்கள் கஜானாவை நிரப்பிக்கொண்ட நீங்கள், கஜானாவை நோக்கிச் செல்லவில்லை என்றால், மக்கள் நம்ப மாட்டார்கள்' என்று எதிர்வினையாற்றியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!