Election bannerElection banner
Published:Updated:

மதுபாட்டில்களைத் திருடியவர்கள் கைது..! கரூரில் காவல்துறை அதிரடி

மதுபாட்டில்களைத் திருடியவர்கள் கைது..! கரூரில் காவல்துறை அதிரடி
மதுபாட்டில்களைத் திருடியவர்கள் கைது..! கரூரில் காவல்துறை அதிரடி

மதுபாட்டில்களைத் திருடியவர்கள் கைது..! கரூரில் காவல்துறை அதிரடி

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மதுபானக் கடையில் 4 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் திருடிய திருடர்களையும்  மதுப்பாட்டில்களையும் கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. ஒருமாதமாக அலைந்து திரிந்து சரக்குகள் திருடியவர்களை காவல்துறையினர் பிடித்துள்ளனர். 

கடந்த 24.12.17-ம் தேதி இரவு அரவக்குறிச்சி காவல் நிலைய சரகம், வெஞ்சமாங்கூடலூர் அரசு மதுபானக்கடையில் 4 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் திருடு போயின. இந்த வழக்கு சம்பந்தமாக அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு  விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

வழக்கின் எதிரிகளைக் கண்டுபிடிக்க கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரனின் உத்தரவின் பேரிலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் நேரடி மேற்பார்வையின் கீழ் அரவக்குறிச்சி ஊரகத்துக்கு உட்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் அறிவுரையின் பேரிலும், அரவக்குறிச்சி வட்ட ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வந்தது. அதன் அடிப்படையில், மதுபான பாட்டில்களைத் திருடிய திண்டுக்கலைச் சேர்ந்த சுந்தர மூர்த்தி, முத்து ஆகியோர்களைக் கைதுசெய்து விசாரித்தனர். அப்போது, வேறு வழக்கில் திருடு போன 4 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் மற்றும் திருடப் பயன்படுத்திய ஒரு காரும், 1 மினிடோரும் கைப்பற்றப்பட்டன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு