`கத்திக் கத்தி படிங்க.. கத்தி தூக்காதீங்க!’ - மாணவர்களுக்கு தமிழிசை அட்வைஸ் | Do not involve in rowdyism; tamilisai advised students 

வெளியிடப்பட்ட நேரம்: 14:16 (31/01/2018)

கடைசி தொடர்பு:14:16 (31/01/2018)

`கத்திக் கத்தி படிங்க.. கத்தி தூக்காதீங்க!’ - மாணவர்களுக்கு தமிழிசை அட்வைஸ்

`மாணவர்கள் கத்திக் கத்தி படிக்கலாமே தவிர கத்தியோடு படிக்கக்கூடாது' என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் சென்னை சென்ட்ரலிலிருந்து திருவள்ளூர் நோக்கிச் சென்ற புறநகர் ரயிலில் மாணவர்கள் அதிக அளவில் பயணம் செய்தனர். அப்போது ரயில் பட்டரவாக்கம் ரயில் நிலையம் வந்தபோது மாணவர்கள் கையில் பட்டாக்கத்தி, அரிவாளுடன் பிளாட்பாரத்தில் இறங்கி ஒடினர். மேலும் பட்டாக்கத்தி, அரிவாளுடன் மாநிலக் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சண்டையில் ஈடுபட்டனர். இந்தச் சண்டையில், மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த பீட்டர், காளிதாஸ் ஆகிய இரு மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். 

இந்தச் சம்பவம்குறித்து வழக்குப் பதிந்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், இந்தச் சம்பவம்குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அப்போது, ``மாணவர்கள் கத்திக் கத்தி படிக்கலாமே தவிர கத்தியோடு படிக்கக் கூடாது என்று அவர் தெரிவித்தார். மேலும், வன்முறையில் ஈடுபடாமல் இருக்க மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும்'' என்றும் தமிழிசை வலியுறுத்தினார். 

முன்னதாக உள்ளாட்சித் தேர்தல்குறித்து தமிழிசை தெரிவித்ததாவது;  ``உள்ளாட்சித் தேர்தலை வெகு விரைவாக நடத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தலுக்கு எப்போதும் பா.ஜ.க தயராகவே இருக்கிறது. வெளிப்படையான நிர்வாகத்தைத் தருவதற்கு மக்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பா.ஜ.க-வுக்கு ஆதரவு தர வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க