வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (04/02/2018)

கடைசி தொடர்பு:19:00 (04/02/2018)

"இந்து மதத்தை இழிவுபடுத்துவதே திமுகவின் கொள்கை" - கடம்பூர் ராஜு தடாலடி!

இந்து மதத்தை இழிவுபடுத்துவதேயே தி.மு.கவினர் கொள்கையாக கொண்டுள்ளனர் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்றார். சுவாமி தரிசனத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு, தி.மு.கவைக் கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில், "தி.மு.க. இந்துக்களுக்கு எதிரான கட்சி. இந்து மதத்தை இழிவுபடுத்துவதேயே தி.மு.கவினர் கொள்கையாகக் கொண்டுள்ளனர். சேது சமுத்திரத் திட்டத்தின் போது, இந்துக் கடவுள் ராமரை தி,மு,க, தலைவர் கருணாநிதி விமர்சித்ததே அதற்குச் சான்று. ஆனால் அ.தி.மு.க யாருயுடைய மனமும் புண்படாத வகையில் எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையை பின்பற்றி வருகிறது. வரும் பிப்.14ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி,  ஓராண்டு சாதனை விழா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கொண்டாடப்படும். கடந்த ஓராண்டில் 30 மாவட்டங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்பட்டுள்ளது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க