குக்கர் சின்னம் வழக்கில் முதல்வர் பழனிசாமிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்! | Delhi HC ordered to edappadi palanichami to response the case of allocate the Cooker Symbol by TTV Dhinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (06/02/2018)

கடைசி தொடர்பு:12:50 (06/02/2018)

குக்கர் சின்னம் வழக்கில் முதல்வர் பழனிசாமிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

ஆர்.கே. நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில், குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றிபெற்றார், டி.டி.வி. தினகரன். 

அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஏதுவாக, அம்மா அணி என்ற பெயரில் செயல்பட அனுமதிக்கக் கோரியும், தங்கள் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கக் கோரியும் டி.டி.வி. தினகரன் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல்செய்யப்பட்டது. மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், வழக்கில் தலைமைத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது. இதுகுறித்து பதிலளித்த தேர்தல் ஆணையம், 'புதிய கட்சி தொடங்கினால், அதைப் பதிவுசெய்து அதற்கு சின்னம் ஒதுக்குவது மட்டுமே தலைமைத் தேர்தல் ஆணையத்தால் முடியும். மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதால், நாங்கள் இதில் தலையிட முடியாது. மேலும் தினகரனின் அணி, கட்சியாகப் பதிவுசெய்யப்படவில்லை. இதனால், அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது சாத்தியமில்லை' என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் பிப்ரவரி 15-க்குள் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட  டெல்லி உயர் நீதிமன்றம், வழக்கை  பிப்ரவரி 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க