பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிக்க உறுதியாக இருக்கிறோம்! சி.வி.சண்முகம் தகவல் | We are sure to release perarivalan &co says CV shanmugam

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (06/02/2018)

கடைசி தொடர்பு:15:40 (06/02/2018)

பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிக்க உறுதியாக இருக்கிறோம்! சி.வி.சண்முகம் தகவல்

'ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரையும் விடுதலைசெய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்' என்று அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேர், 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கின்றனர். இவர்களை விடுவிக்க தமிழக அரசு முயற்சி எடுத்துவருகிறது. இருப்பினும், மத்திய அரசின் எதிர்ப்பால் அவர்களை விடுவிப்பதில் குழப்பம் நீடித்துவருகிறது. இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இதற்கிடையே, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், 'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரையும் விடுதலைசெய்வதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. 7 பேரையும் விடுதலைசெய்ய, தமிழக அரசு போதிய முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது' என்றார். முன்னதாக, டி.டி.வி. தினகரன் குறித்த கேள்விக்கு, 'அ.தி.மு.க-வில், தினகரன் அடிப்படை உறுப்பினர்கூட கிடையாது. கட்சியையும் சின்னத்தையும் கோர தினகரனுக்கு எந்தவித உரிமையும் இல்லை. அ.தி.மு.க-வுக்கு உரிமை கோருவதன்மூலம் டி.டி.வி. தினகரன் குழப்பத்தின் உச்சியில் இருப்பதைக் காட்டுகிறது' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க