``எட்டிவிடும் தூரத்தில் தமிழ் இருக்கை' கனவு" - தி.மு.க நிதியுதவிக்கு பாண்டியராஜன் வரவேற்பு!

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழுக்கென தனி இருக்கை அமைப்பதற்கு 40 கோடி ரூபாய் நிதி தேவைப்பட்டது.  

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், இதற்காக தங்களால் முடிந்த நிதிகளைத் தந்துவந்தனர். தமிழக அரசு சார்பில், தமிழ் இருக்கைக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிலையில், தி.மு.க சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். மேலும், தமிழ் மொழியின் மேம்பாட்டுக்கும் முதன்மைக்காகவும் போராடும் கருணாநிதி சார்பில் நிதியுதவி அளிக்கப்படுகிறது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்குக் கிடைக்கப்போகும் இருக்கை என்பது, ஒவ்வொரு தமிழருக்கும் கிடைக்கும் பெருமிதம் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதனிடையே, தமிழ் இருக்கைக்கு தி.மு.க ரூ.1 கோடி நிதி அளிக்க முன்வந்துள்ளதை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வரவேற்றுள்ளார். 

அதில், 'தி.மு.க நிதியுதவியை வரவேற்கிறோம். கூடிய விரைவில், அந்த நிதி கிடைக் கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். தி.மு.க நிதியின் மூலம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையும் கனவு எட்டிவிடும் தூரத்தில் இருக்கிறது. இருப்பினும், மீதமுள்ள ரூ.1 கோடி நிதி விரைவில் கிடைக்கும். மேலும் தமிழில் புதிதாக 2,500 சொற்களை உருவாக்கும் பணியை கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன்கார்க்கி மேற்கொண்டுவருகிறார். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். தமிழ்ச் சொற்களுக்கு காப்புரிமை கோரும் நிலை ஏற்படும் என்பதால், புதிய சொற்களை அரசே வெளியிடுகிறது. இதேபோல, உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டுவர, போதுமான முயற்சிகளை தமிழக அரசு முன்னெடுத்துவருகிறது' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!