வெளியிடப்பட்ட நேரம்: 12:26 (09/02/2018)

கடைசி தொடர்பு:12:31 (09/02/2018)

ஜெ. மரணம் தொடர்பாக விசாரணை: பிப்.13-ல் ஆஜராக விவேக் ஜெயராமனுக்கு ஆணையம் சம்மன்!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக இளவரசி மகன் விவேக்குக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாகச் சந்தேகம் எழுப்பப்படவே ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் உதவியாளர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் என ஜெயலலிதாவின் மரணத்தில் தொடர்புடைய அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல் சமீபத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. சிறையில் உள்ள அவரிடம் இதுதொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விரைவில் விசாரணை நடத்துவார் எனத் தெரிகிறது. 

இந்தநிலையில், இளவரசியின் மகனும் ஜெயா டிவி-யின் சி.இ.ஓ-வுமான விவேக் ஜெயராமனுக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 13 அல்லது 14-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என விவேக்குக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விவேக் ஜெயராமன் போயஸ்கார்டனில் ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளையாக வளர்ந்து வந்தார். மேலும், ஜெயலலிதா சிறை சென்றபோது முதல் பல்வேறு உதவிகளைச் செய்துவந்தவர் விவேக் என்பதால் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்பனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க