பரிதி இளம்வழுதி அ.தி.மு.க-விலிருந்து நீக்கம்! - ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் நடவடிக்கை

கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராகச் செயல்பட்டதால் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி நீக்கப்படுவதாக அ.தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. 

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பதவியேற்றது முதல் கட்சியை மேம்படுத்துவற்கான வேலைகள் தீவிரமடைந்துள்ளன. அதன்படி, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களை அ.தி.மு.க-விலிருந்து நீக்கி ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் அதிரடி காட்டி வருகின்றனர். குறிப்பாக, டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் நாள்தோறும் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்படுகின்றனர். இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியை நீக்கி ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் உத்தரவிட்டுள்ளனர். கட்சியின் கொள்கைகளுக்கு முரணாகச் செயல்பட்டதால் இருவரும் நீக்கப்படுவதாக அ.தி.மு.க சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி டி.டி.வி.தினகரன் ஆதரவாளராகச் செயல்பட்டதால் அவர்மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. முன்னதாக இதே காரணங்களுக்காகத் தென் சென்னை மற்றும் கடலூர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் 50 பேர் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!