``ஐ.டி. ரெய்டுக்குப் பயந்தே ரஜினி மத்திய அரசைக் குறைகூறாமல் இருக்கிறார்'' - சீமான்!

கடந்த வருடம் சிஸ்டம் சரியில்லை என்று தன் ரசிகர்களுடனான சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்தநிலையில், சிஸ்டம் தமிழகத்தில் சரியில்லையா இந்தியாவில் சரியில்லையா என்று செய்தியாளர்கள் நேற்று கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த ரஜினிகாந்த், `தமிழ் நாட்டில்தான் சிஸ்டம் சரியில்லை’ என்றார். மத்தியில் சிஸ்டம் சரியா இருக்கிறதா என்ற கேள்விக்கு அவர், `முதலில் தமிழகத்தில்தான் சிஸ்டம் சரி செய்ய வேண்டும்’ என்றும் தெரிவித்தார். இதனிடையே ரஜினிகாந்த்தின் இந்தக் கருத்தை விமர்சித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வருமானவரித் துறைக்குப் பயந்தே மத்திய அரசை ரஜினிகாந்த் குறைகூறாமல் இருக்கிறார் எனக் குற்றம் சாட்டினார். இதுகுறித்து கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததில், "தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என ரஜினிகாந்த் கூறுவது தவறு. உண்மைமையில் மத்திய அரசின் சிஸ்டம்தான் சரியில்லை. வருமான வரித்துறைக்குப் பயந்தே ரஜினிகாந்த் மத்திய அரசைக் குறைகூறாமல் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை எனக் கூறியுள்ளார்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!