``ரஃபேல் ஒப்பந்தத்தை நண்பருக்குத் தாரைவார்த்தவர் மோடி’’ - ராகுல் குற்றச்சாட்டு! | Narendra Modi didn't speak about future, He talking about Congress party says Rahul Gandhi

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (10/02/2018)

கடைசி தொடர்பு:20:00 (10/02/2018)

``ரஃபேல் ஒப்பந்தத்தை நண்பருக்குத் தாரைவார்த்தவர் மோடி’’ - ராகுல் குற்றச்சாட்டு!

ரஃபேல் ஒப்பந்தத்தை ஹெச்.ஏ.எல். நிறுவனத்திடமிருந்து பறித்து தனது நண்பருக்கு பிரதமர் மோடி கொடுத்துவிட்டதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

224 தொகுதிகளுக்கான கர்நாடக மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அதையொட்டி பா.ஜ.கவும், ஆளும் காங்கிரஸும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சமீபத்தில் பெங்களூரு வந்த மோடி, பிரசாரத்தில் கலந்துகொண்டு காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்தநிலையில் இன்று பெல்லாரி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார். 

அதில், "நாட்டு மக்கள் பிரதமரிடமிருந்து எதிர்காலத்தை எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவரோ நாடாளுமன்றத்தில் ஒருமணி நேரம் நீண்ட உரையாற்றியும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் மற்றும் விவசாயம் குறித்து பேசாமல், காங்கிரஸ் கட்சிமீது குற்றம்சாட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார். இதேபோல் ரஃபேல் விமான ஒப்பந்தம் முதலில் அரசு நிறுவனத்திடமிருந்தது. தற்போது அதை பறித்து தனது நண்பருக்கு ஒப்பந்தத்தை அளித்துள்ளார்" என்று குற்றம்சாட்டினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close