'ரஜினி, கமல் எனக்கு ஜூனியர்கள் தான்' கலகலத்த விஜயகாந்த்!

சட்டப்பேரவையில் குற்றவாளியான ஜெயலலிதாவின் புகைப்படத்தை திறக்க கூடாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவருக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கவும், தமிழக சட்டப்பேரவையில் அவருடைய உருவப்படத்தை திறக்கவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. இதனையடுத்து முதல்வர், துணை முதல்வர் தலைமையில் சபாநாயகர் தனபால் நாளை காலை ஜெயலலிதா படத்தை திறந்து வைப்பார் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படம் திறப்புக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

சென்னை அம்பத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "சொத்துக் குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி ஜெயலலிதா என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியான ஜெயலலிதாவின் புகைப்படத்தை சட்டப்பேரவையில் திறக்க கூடாது. மாணவர்கள் பணம் கொடுத்து மருத்துவ சீட் பெற முடியாததால் நீட் தேர்வு அவசியம். பணியாளர் நியமன முறைகேடுகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலுக்கு தேமுதிக எப்போதும் தயாராக உள்ளது. தமிழகத்தில் பாஜகவால் கால் ஊன்ற முடியாது. அவ்வாறு ஊன்றினால் பார்த்துக்கொள்ளலாம்" என்றார். முன்னதாக ரஜினி, கமல் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, 'சினிமாவில் ரஜினி, கமல் எனக்கு சீனியர்கள், ஆனால் அரசியலில் அவர்கள் எனக்கு ஜூனியர்கள் தான்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!