`அரசுக்கு எதிராகப் போராட்டம்' : ஜி.ராமகிருஷ்ணன் கைது! | Marxist state secretary G.Ramakrishnan arresedt for opposes the Bus fair hike

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (12/02/2018)

கடைசி தொடர்பு:13:10 (12/02/2018)

`அரசுக்கு எதிராகப் போராட்டம்' : ஜி.ராமகிருஷ்ணன் கைது!

நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறி, பேருந்துக் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியது தமிழக அரசு. 

தமிழக அரசின் இந்த அறிவிப்பு கடும் பாதிப்பை ஏற்படுத்தியதால், பொதுமக்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தினர். இதேபோல எதிர்க்கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் தரப்பு போராட்டங்களைத் தொடர்ந்துவருகின்றனர். பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து, பேருந்துக் கட்டணத்தை சிறிது குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இருப்பினும் பேருந்துக் கட்டண உயர்வு பிரச்னை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதையடுத்து, எதிர்க்கட்சிகள் மீண்டும் போராட்டங்களைத் தொடர முடிவுசெய்துள்ளன. 

இந்த நிலையில், கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று சென்னை பாரிமுனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டார். சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றதாகக் கூறி, ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரை  போலீஸார் கைதுசெய்தனர். இதனால், பாரிமுனை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல சேலம்  ஆட்சியர் அலுவலகத்தில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க