`உலக முதலீட்டாளர் மாநாடு எப்போது?' - தேதி அறிவித்தது தமிழக அரசு! | World Investor Conference will be postpended on next year: TN govt announced

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (12/02/2018)

கடைசி தொடர்பு:16:51 (12/02/2018)

`உலக முதலீட்டாளர் மாநாடு எப்போது?' - தேதி அறிவித்தது தமிழக அரசு!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் 2015-ம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நடத்தினார். 

அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 9,10 தேதிகளில் முதல்முறையாகத் தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. இதில், 2.42 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தமிழகத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு முதலீட்டாளர்கள் மாநாடு தடைபட்டது. பின்னர் எடப்பாடி தலைமையில் அரசு அமைந்தவுடன் இந்த வருடம் முதலீட்டாளர்கள் மாநாடு அறிவிக்கப்பட்டது. 

இதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி அருண் ராய் தலைமையில் குழு நியமிக்கப்பட்டு அதற்கான வேலைகளும் நடந்து வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே அடுத்த ஆண்டு ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்றும் அதற்காக ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. மேலும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள், தொழில் கூட்டமைப்புகளுக்கு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஆண்டு மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மாநாடு அடுத்த ஆண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close