``அப்போலோவில் ஜெயலலிதாவைப் பார்க்கவேயில்லை'' - விவேக் ஜெயராமன் | I did not see Jayalalithaa when she was admitted in Apollo says Vivek jayaraman

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (13/02/2018)

கடைசி தொடர்பு:18:10 (13/02/2018)

``அப்போலோவில் ஜெயலலிதாவைப் பார்க்கவேயில்லை'' - விவேக் ஜெயராமன்

அப்போலோவில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை என விசாரணை ஆணையத்தில் விவேக் ஜெயராமன் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விவேக் ஜெயராமன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் சர்ச்சை ஏற்படவே, தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்தது. சென்னை, எழிலக வளாகத்தில் அலுவலகம் ஒதுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் தலைமைச் செயலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள், உதவியாளர்கள், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் என அவரின் மரணத்தில் தொடர்புடைய அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இவர்கள் அளித்த வாக்குமூலங்கள் அனைத்தும் பிரமாணப் பத்திரங்களாகத் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. இதேபோல் சமீபத்தில் அவரது தோழி சசிகலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. சிறையில் உள்ள அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விரைவில் விசாரணை நடத்துவார் எனத் தெரிகிறது. 

இந்தநிலையில், கடந்த 9-ம் தேதி இளவரசியின் மகனும் ஜெயா டிவி-யின் சி.இ.ஓ-வுமான விவேக் ஜெயராமனுக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. விவேக் ஜெயராமன், ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளையாக வளர்ந்தவர். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர், போயஸ்கார்டனில் என்ன நடந்தது என்பது கண்டிப்பாக தெரிந்திருக்கும் என்பதால் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனையடுத்தது, சம்மனை ஏற்று இன்று விசாரணை ஆணையத்தில் விவேக் ஜெயராமன் ஆஜராகினார். அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி சுமார் 3 மணிநேரம் நடத்தினார். விசாரணையில், "சிகிச்சையின் போது மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்கவில்லை" என அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர், 28ம் தேதி மீண்டும் விசாரணையில் ஆஜராகுமாறு விவேக்கிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க