`அ.தி.மு.க-விலிருந்து விலகுகிறேன்' - அனிதா குப்புசாமி அறிவிப்பு!

அ.தி.மு.க-விலிருந்து விலகுவதாகப் பாடகி அனிதா குப்புசாமி அறிவித்துள்ளார். 

அனிதா குப்புசாமி

பிரபல கிராமிய பாடகி அனிதா குப்புசாமி, கடந்த 2013-ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தார். தொடர்ந்து, அ.தி.மு.க-வுக்காகப் பல்வேறு தேர்தல்களில் பிரசாரம் மேற்கொண்டார். இருப்பினும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சி நடவடிக்கைகளில் பங்குபெறாமல் இருந்துவந்தார். 

இந்த நிலையில், அ.தி.மு.க-விலிருந்து விலகுவதாக அவர் இன்று அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தலைமை பிடிக்காததால் அ.தி.மு.க-விலிருந்து விலகுவதாகவும் வேறு எந்த அணியிலும் இணையப்போவதில்லை' என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், 'அரசியலிலிருந்து நிரந்தரமாக விலகிவிட்டேன் என்று அதிகாரபூர்வமாகப் பத்திரிகையில் அறிவித்துவிட்டேன். யாராவது திரித்துச் சொன்னால் நம்பாதீர்கள்' என்று பதிவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!