லைகா செயல் அதிகாரி, ரஜினி மன்ற மாநிலச் செயலாளராக நியமனம்! | Raju Mahalingam was appointed as the state secretary of the Rajini's makkal mandram

வெளியிடப்பட்ட நேரம்: 12:51 (15/02/2018)

கடைசி தொடர்பு:12:51 (15/02/2018)

லைகா செயல் அதிகாரி, ரஜினி மன்ற மாநிலச் செயலாளராக நியமனம்!

ரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளராக ராஜு மகாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். 

ராஜு மகாலிங்கம்

கட்சி தொடங்கப்போவதாகக் கடந்த டிசம்பர் 31-ம் தேதி ரஜினிகாந்த் அறிவித்தார். இதன்பிறகு அவரது அரசியல் நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளது. முதற்கட்டமாக மாவட்ட வாரியாக தனது மன்றங்களுக்கு நிர்வாகிகளை நியமித்துள்ள அவர் விரைவில் கட்சி பெயர் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளராக ராஜு மகாலிங்கத்தை நியமித்து ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ராஜு மகாலிங்கம் லைகா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தவர்.  

2.0 படத்தில் பணியாற்றியபோது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் மக்கள் மன்றத்தில் சேரும் அளவுக்கு நெருக்கமானது. இதனால் லைகா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பணியை அவர் ராஜினாமா செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது. ராஜினாமாவுக்குப் பிறகு மாநிலம் முழுவதும் மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பதற்காக ராஜு மகாலிங்கத்தை அனுப்பி வைத்த நிலையில் தற்போது மன்றத்தில் முக்கியப் பதவியை அவருக்கு ரஜினி அளித்துள்ளார். முன்னதாக இன்று  ரஜினிகாந்தை தமிழருவி மணியன் சந்தித்து பேசினார். அப்போது இது வழக்கமான சந்திப்புதான் எனத் தமிழருவி மணியன் தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க