பிரதமர் கருத்துக்கு மு.க.ஸ்டாலின் ட்வீட்! முக்கிய கோரிக்கை வைத்தார்

தமிழ் மொழி பழமையானது எனப் பிரதமர் மோடி கூறியது உண்மையெனில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

மு.க.ஸ்டாலின்

டெல்லியில் நேற்று மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, சம்ஸ்கிருதத்தைவிடவும் பழமையான மொழி தமிழ் என்றும் அத்தகைய அழகான மொழியை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் மோடி பேசினார். இந்தக் கருத்துக்கு தற்போது தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமரை டேக் செய்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், " சம்ஸ்கிருதத்தை விடவும் தமிழ் பழமையானது என்ற பிரதமரின் கருத்தை வரவேற்கிறேன். தமிழைப் பற்றி உணர்ந்து கூறியிருக்கும் இந்தக் கருத்து அவருடைய மனசாட்சிக்கு உண்மையெனில் உடனடியாகத் தமிழை ஆட்சி மொழியாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். இதேபோல் சம்ஸ்கிருதத்துக்கு இணையாக நிதி ஒதுக்கீடு செய்து தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவ முன்வர வேண்டும். மேலும் திருக்குறளை தேசிய நூலக அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்" என்று வலியுறுத்தியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!