`கமலின் முதல் அரசியல் மாநாடு' - அர்விந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு? | Delhi CM arvind kejriwal participate in kamal haasan Political conference

வெளியிடப்பட்ட நேரம்: 09:06 (20/02/2018)

கடைசி தொடர்பு:10:42 (20/02/2018)

`கமலின் முதல் அரசியல் மாநாடு' - அர்விந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு?

நாளை, மதுரையில் நடைபெறும் கமல்ஹாசனின் முதல் அரசியல் மாநாட்டில், டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் - அரவிந்த் கெஜ்ரிவால்

அரசியலில் குதிக்க நடிகர் கமல்ஹாசன் ரெடியாகிவிட்டார். ஆம், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்திலிருந்து நாளை தனது அரசியல் பயணத்தைத் துவக்கும் அவர், அதிகாரபூர்வமாக தனது கட்சிப் பெயரை அறிவிக்க உள்ளார். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் ஒரே காலகட்டத்தில் அரசியல் வருகைகுறித்து அறிவித்தாலும், தற்போது ரஜினியை முந்தி கமல் தனது கட்சிப் பெயரை அறிவிக்க உள்ளார். இது, அவரது ரசிகர்கள் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல, தமிழக மக்களும் அவரின் அரசியல் நடவடிக்கைகள்குறித்து அறிய ஆர்வமாக உள்ளனர். 

இந்த நிலையில், நாளை தனது அரசியல் சுற்றுப் பயணத்தை ராமநாதபுரத்தில் தொடங்கும் அவர், மாலை மதுரை ஒத்தக்கடையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தையும் நடத்த உள்ளார். தனது அரசியல் பயணத்தின் முதல் பொதுக்கூட்டமான இதில் பங்கேற்க, பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுவரை யார் பங்கேற்கப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகாத நிலையில், தற்போது டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அரசியலில் ஈடுபடப்போவதாக கமல் அறிவித்தபோது ,முதல் ஆளாக அவரது வீடு தேடி வந்து கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது அவரது முதல் மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார். முன்னதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரை சந்தித்த கமல், அரசியல் நடவடிக்கைகள்குறித்து ஆலோசித்த நிலையில் அவர்களும் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க