`வருக வருக... புது யுகம் படைக்க..!' - மதுரைக்கு அழைக்கும் கமல்ஹாசன்! | Actor Kamal Haasan welcomes his fans participate the political conference

வெளியிடப்பட்ட நேரம்: 11:31 (20/02/2018)

கடைசி தொடர்பு:11:31 (20/02/2018)

`வருக வருக... புது யுகம் படைக்க..!' - மதுரைக்கு அழைக்கும் கமல்ஹாசன்!

'நாளை நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில், நமது கட்சிக் கொடியை ஏற்ற உள்ளேன்' என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

கமல்ஹாசன்

நாளை முதல், நடிகர் கமல்ஹாசன் முழுநேர அரசியல்வாதியாக மாறப்போகிறார். ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்திலிருந்து தனது அரசியல் பயணத்தைத் துவக்கும் அவர், தனது கட்சிப் பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிக்க  உள்ளார். மேலும், மதுரை ஒத்தக்கடை பகுதியில் தனது முதல் பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளார். இது தொடர்பான பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. முன்னதாக, பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால், கமல் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

இந்நிலையில், நாளை நடக்க உள்ள பொதுக்கூட்டத்துக்கு ரசிகர்களை அழைக்கும் வகையில் கமல் ட்வீட் செய்துள்ளார். அதில், 'நாளை துவங்க உள்ளது நம் நெடும் பயணம். நாளை மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில், ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் நமது கட்சிக் கொடியை ஏற்ற உள்ளேன். புதிய கட்சியின் பெயரையும் எமது கொள்கையின் சாராம்சத்தையும் விளக்க உள்ளேன். வருக வருக... புது யுகம் படைக்க..!' என்று கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க