`பிரதமர் மோடி எங்கள் நண்பர்' - அடித்துச் சொல்லும் செல்லூர் ராஜு!

'பிரதமர் மோடி எங்கள் நண்பர்' என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 

செல்லூர் ராஜு

கடந்த 12-ம் தேதி, சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, திறப்புவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, ஜெயலலிதாவின் உருவப்படத்தைத் திறக்க பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார். பிரதமர் தேதி ஒதுக்காததால், சபாநாயகரை வைத்து திறப்புவிழா நடைபெற்றது. ஆனால், வரும் 24-ம் தேதி தொடங்கப்பட உள்ள மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கிவைக்க உள்ளார். 

இதற்கிடையே, பிரதமர் கூறியதால்தான் அமைச்சரவையில் இணைந்துகொண்டேன் என்றும், உருவப்படத் திறப்புவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்காததுகுறித்தும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'பேரவையில் ஜெயலலிதா படத் திறப்புக்கு பிரதமர் மோடியை அழைக்கவில்லை. அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, அதற்கு தந்தை, தாய் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும்தான். பிரதமர் மோடி, எங்களின் நண்பர் ஆவார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் கூறிவிட்டார். ஸ்டாலின் கூறியதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டவில்லை' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!