`கமல் தலைப்புச் செய்தியாக இருக்கலாம்; ஆனால் தலைவராக முடியாது' - தமிழிசை தடாலடி!

'நடிகர்கள் வந்து ஆட்சி செய்ய வேண்டும் என அவசியம் இல்லை' என தமிழிசை தெரிவித்துள்ளார். 

தமிழிசை சவுந்தரராஜன்

இதோ, அதோ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கலாமின் இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தை நடிகர் கமல்ஹாசன் தொடங்கிவிட்டார். தொடர்ந்து, இன்று கட்சிப் பெயரை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ள அவர், மதுரை ஒத்தக்கடையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறார். கமலின் நேரடி அரசியல்தான் தமிழகத்தின் இன்றைய ஹாட் டாப்பிக்காக இருந்தாலும், அவரின் அரசியல் நடவடிக்கைக்கு மற்ற கட்சிகளிடமிருந்து ரியாக்ஷ்ன்கள் வரத் தொடங்கிவிட்டன. இந்த நிலையில், 'கமலால் ஒருபோதும் தலைவராக முடியாது' என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தலைப்புச் செய்தியாக கமலின் கட்சி வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அவரால் ஒருபோதும் தலைவராக முடியாது. 50 வருடங்களாக போன்சாய் மரமாக இருந்துவிட்டு, தற்போது ஆலவிருட்சமாக வளர்வேன் என்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள். நடிகர்கள் வந்துதான் தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என அவசியம் இல்லை. அனைத்து அரசியல் தலைவர்களும் களத்தில் இருக்கிறார்கள். திரைப்படப் போட்டியைப் போல சகோதரர் கமல், அவசர அவசரமாகக் கட்சியைத் தொடங்குகிறார்' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!