
ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 84 தமிழர்கள் விடுதலை..!
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள ஆஞ்சநேயபுரத்தில் செம்மரம் வெட்ட வந்ததாக இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்ட தமிழர்களை தற்போது நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்து உள்ள ஆஞ்சநேயபுரம் சோதனை சாவடியில் சந்தேகத்தின் பெயரில் லாரியை சோதனை செய்தபோது அதில் திருவண்ணாமலை மற்றும் வேலூர் பகுதிகளை சேர்ந்த 84 பேர் இருந்ததாகவும், அவர்கள் செம்மரம் வெட்டும் வேலைக்காக அழைத்துவரப்பட்டதாகவும் கூறி ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்பு போலீஸ் கைது செய்தனர். விசாரனையில் கைதானவர்கள் சமையல் வேலைசெய்ய வந்ததாக கூறியுள்ளனர். இந்நிலையில் தற்போது கைதான 84 பேரையும் நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்துள்ளார் ரேணிகுண்டா வட்டாட்சியர் நரசிம்மலு நாயடு.

'செம்மரங்கள் வெட்ட வனப்பகுதிக்குள் வரமாட்டோம்' என 84 பேரிடமும் கையெழுத்து பெற்று விடுதலை செய்த போலீசார், விடுவிக்கப்பட்ட அனைவரும் விசாரணைக்கு அழைக்கும்போது வரவேண்டும் என்றும், 6 மாத காலம் கண்கானிப்பில் இருப்பார்கள் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.