'இதைச் சொல்ல ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை' - கடம்பூர் ராஜூ தாக்கு! | There is No rights to Stalin for say resigning of all mp's - minister kadamboor raju

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (04/03/2018)

கடைசி தொடர்பு:23:30 (04/03/2018)

'இதைச் சொல்ல ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை' - கடம்பூர் ராஜூ தாக்கு!

எம்.பி-க்களை ராஜினமா செய்யச் செல்ல ஸ்டாலினுக்கு எந்தவித உரிமையோ, தகுதியோ கிடையாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டி உள்ளார். 

கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவடம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில், அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு 100 பெண்களுக்கு மானிய விலையிலான இருசக்கர வாகனங்களை வழங்கினார். பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடியார், பிரதமர் மோடியிடம் பொது மேடையில் வலியுறுத்தியுள்ளார். மேலும், அனைத்து கட்சி கூட்டத்தினையும் கூட்டி அனைத்துக் கட்சியினர்களின் கருத்துக்களையும் கேட்டுள்ளார். இந்நிலையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளை பிரதமர் சந்திக்க மறுப்பதாகக் கூறுவது தவறான தகவல். 

அமைச்சர் நிதின்கட்கரியை சந்தித்த பின்பு பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குவதாக தெரிவித்துள்ளாரே தவிர சந்திக்க மறுப்பதாக கூறவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்காக கடந்த 1998ல் மத்திய அமைச்சரவை பதவியில் இருந்து அ.தி.மு.க., விலகியது. அது தான் அ.தி.மு.க-வின் நிலைப்பாடு. 14 ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் இருந்த  தி.மு.க. வருமானம் வருக்கூடிய துறைகளை மட்டுமேதான் பெற்றது. அவர்கள் ஏன் நீர்வளத்துறையை பெற்று காவிரி பிரச்சினையை தீர்த்து இருக்கவில்லை. அது பற்றி கருத்தைக் கூட தெரிவிக்கவில்லையே. அ.தி.மு.க., எம்.பி.க்களை பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி கூறி உள்ளார் தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின். 

இதைப் பற்றிக் கூற அவருகக்கு எந்தவித உரிமையோ, தகுதியோ  கிடையாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முயற்சியில் மத்திய அமைச்சர்கள் இங்கு ஒரு நிலைப்பாடு, அங்கு நிலைப்பாடு எடுத்தாலும் அரசியல் கருத்துக்களுக்கு இடம் இல்லாமல் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் முழு மூச்சாக செயல்பட்டு வருகிறது எடப்பாடியார் அரசு. இது குறித்து தலைமைச் செயலகத்துக்கே ஸ்டாலினை அழைத்து அடுத்ததாக என்ன செய்யலாம் எனக் கேட்டுள்ளார் முதல்வர். எல்லாம் தெரிந்த ஸ்டாலின், மொத்த எம்.பி.க்களையும் ராஜினாமா செய்யச் சொல்லி கூறியிருப்பது சரி தானா" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க