``மய்யமாக வாழ்வது மிகவும் கடினமான காரியம்” மாணவர்கள் மத்தியில் கமல் பேச்சு

நடிகர் கமல்ஹாசன், சென்னை காலவாக்கம் அருகே உள்ள தனியார் கல்லூரியில், மாணவர்கள் மத்தியில் பேசினார். 

கமல்

”நான் இங்கு, தொண்டர்களைப் பார்க்கவில்லை. இங்கு இருப்பவர்கள் அனைவருமே தலைவர்கள். மக்கள் நீதி மய்யம், உங்களைப் போன்றவர்களையே அழைக்கிறது. என்னை ஆதரித்தோ எதிர்த்தோ நீங்கள் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது உங்கள் உரிமை. உங்கள் பொறுப்பு. 

நான், உங்களுள் ஒருவனாக இருக்கவே விரும்புகிறேன். மக்கள் ஆட்சி மலர வேண்டும் என்றால், அதை மக்கள்தான் மலரச்செய்ய வேண்டும். மய்யம் என்றால், நடுவில் இருந்துகொண்டு இரண்டு பக்கமும் பார்த்து உங்கள் அறிவிற்கு நியாயமான, மனதிற்கு நேர்மையான முடிவை எடுத்தல். மய்யத்தில் இருப்பதை அனைவரும் கிண்டல் செய்கிறார்கள். ஆனால், அப்படி வாழ்வது மிகவும் கடினமான காரியம். அதை நான் செய்ய முயற்சிக்கிறேன்.  நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட, நம் நாடு ஒரு சிறந்த மய்யமாக வளரும்” எனப் பேசினார்.இன்று மாலை சென்னையில் நடைபெறும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் தின பொதுக்கூட்டத்தில் கமல் பேசுகிறார்,. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!