'மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதால் அய்யாக்கண்ணு மீது தாக்குதல்' - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

திருச்செந்தூர் கோயில் அருகில் நோட்டீஸ் வழங்கிய விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை, பா.ஜ.க மகளிர் அணித்தலைவர்  கன்னத்தில் அறைந்து  செருப்பை காட்டி இழிவாகப் பேசிய சம்பவத்தை சி.பி.எம். மாநில செயற்குழு கண்டிப்பதாக மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

கே பாலகிருஷ்ணன்

இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், ''விவசாயிகள் பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தைக் கண்டித்தும், கோரிக்கைகளை முன்வைத்தும் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் சங்கத்தினர் கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைபயண பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.  இந்நிலையில் திருச்செந்தூர் கோவில் அருகில் பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கிக் கொண்டிருந்த போது தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க மகளிர் அணித் தலைவர் நெல்லையம்மாள், அய்யாக்கண்ணுவை கன்னத்தில் அறைந்ததோடு, செருப்பை எடுத்துக்காட்டி இழிவாகப் பேசி மிரட்டியுள்ளார். நோட்டீஸ் கொடுப்பதையும் பா.ஜ.க-வினர் தடுத்துள்ளனர்.

ஜனநாயக நாட்டில் தங்களது கருத்தை தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. இதற்காக  தாக்குதலில் ஈடுபடுவது ஏற்கக் கூடியதல்ல.  மோடி அரசுக்கு எதிராக அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் ஏற்பட்ட ஆத்திரத்தின் காரணமாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதை தமிழிசை சவுந்தரராசன்  நியாயப்படுத்தியதும், ஹெச். ராஜா,  தாக்கியவர்களை பாராட்டியதும் அநாகரீகமான அரசியல், வன்மையாக கண்டிக்கத்தக்கது. நெல்லையம்மாள் மற்றும் பா.ஜ.க-வினர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!