Published:Updated:

தேர்வாணையத்தில் சீர்திருத்தம்!

தேர்வாணையத்தில் சீர்திருத்தம்!

தேர்வாணையத்தில் சீர்திருத்தம்!

தேர்வாணையத்தில் சீர்திருத்தம்!

Published:Updated:
தேர்வாணையத்தில் சீர்திருத்தம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடந்துள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகளைப் பார்க்கும்போது, பயங்கர அதிர்ச்சியாக இருக்கிறது.

அரசுப் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் இடத்தில் இத்தனை ஊழல்கள் நடந்ததற்குக் காரணம், அங்கு எங்கும் எதிலும் வெளிப்படைத்தன்மை இல்லாததுதான். ஆணையத்தின் தலைவர் முதல் உறுப்பினர்கள் மற்றும் செயலர் வரை ஊழல் செய்திருக்கிறார்கள்! இவர்கள் மூலம் பணம் கொடுத்து வேலைக்குச் சேர்ந்தவர்களும், கண்டிப்பாக ஊழல்வாதிகளாகத்தான் இருப்பார்கள். லஞ்சமாகக் கொடுத்த பணத்தை எடுப்பதற்காக நிச்சயம் மோசடி வேலைகளில்தான் ஈடுபடுவார்கள். அதனால் அதிரடி நடவடிக்கை எடுத்து, தவறான வழிகளில் வேலைக்குச் சேர்ந்தவர்களை உடனடியாக அந்தப் பணிகளில் இருந்து நீக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த தேர்வாணையத்துக்குத் துடிப்பான இளைய அதிகாரிகளையே நியமனம் செய்ய வேண்டும். மேலும் இங்கு நடக்கும் ஒவ்வொரு செயல்பாடும் அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம் இணையத்தில் கொண்டு வரப்பட வேண்டும்.

இந்தப் பதவியை வைத்துக்கொண்டு தவறு செய்தவர்களை, அரசு கடுமையாகத் தண்டிக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இந்தத் துறையில் ஊழல், மோசடி போன்றவை ஒட்டுமொத்தமாகக் குறையும். உண்மையில் தகுதி உள்ளவர்கள் மட்டும் வேலைகளில் அமர முடியும்.

- வி.பி.மகராசி, வள்ளியூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism