Published:Updated:

மூச்சு முட்டுதா கல்வி கட்டணம்?

மூச்சு முட்டுதா கல்வி கட்டணம்?
பிரீமியம் ஸ்டோரி
மூச்சு முட்டுதா கல்வி கட்டணம்?

தப்பிக்க சில எளிய வழிகள்!கல்வி

மூச்சு முட்டுதா கல்வி கட்டணம்?

தப்பிக்க சில எளிய வழிகள்!கல்வி

Published:Updated:
மூச்சு முட்டுதா கல்வி கட்டணம்?
பிரீமியம் ஸ்டோரி
மூச்சு முட்டுதா கல்வி கட்டணம்?

ண்டுதோறும் பல்லாயிரக்கணக்கில் தனியார் பள்ளிகள் நடத்தும் வசூல் வேட்டையைச் சமாளிக்க முடியாமல் பெற்றோர்களுக்கு நாக்குத்தள்ளுகிறது. நகைகளை அடகு வைத்தும், வட்டிக்குக் கடன் வாங்கியும் கல்விக் கட்டணத்தைக் கட்டுகிறார்கள். அப்பாடா! ஒரு வழியாக ஃபீஸ் கட்டிவிட்டோம் என்று பெற்றோர்கள் பலர் நிம்மதிப் பெருமூச்சுவிட்டாலும், அடுத்த ஆண்டு ஃபீஸ் கட்டுவதற்கு என்ன செய்வது என்கிற கவலையும், யோசனையும் இப்போதே அவர்களை வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது.

பொதுவாக, பள்ளிக்கூட கட்டணத்துக்காக வாங்கும் கடனுக்கு 14 முதல் 22 சதவிகிதம் வரை பெற்றோர்கள் வட்டி கட்டுகிறார்கள். வட்டியோடு இந்தக் கடனை அடைத்து முடிப்பதற்குள் அடுத்த கல்வி ஆண்டு வந்துவிடும். மீளாச்சிறையில் மாட்டிக்கொண்ட பெற்றோர்களுக்கு,
இந்தச் சிக்கலில் இருந்து விடுதலை பெற புதுச்சேரியைச் சேர்ந்த ஃபைனான்சியல் பிளானர் எஸ்.ராஜசேகரன் சொல்லும் எளிய வழிகள் சில...

மூச்சு முட்டுதா கல்வி கட்டணம்?

ரெக்கரிங் டெபாசிட்!

‘‘4-ம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கான பள்ளிக்கல்விக் கட்டணம் ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். அதற்கான தொகையை, ஆர்.டி-யில் (Recurring Deposit) எளிதாகச் சேமிக்க முடியும். ஒரு பொதுத் துறை வங்கியில் மாதம் ஒன்றுக்கு, 2,500 ரூபாய் வீதம் ஒவ்வொரு மாதமும் ஆர்.டி கணக்கில் சேமித்து வந்தால், ஆண்டு இறுதியில் 30,000 ரூபாய் கிடைத்துவிடும். இந்தத் தொகைக்கு வட்டியும் கிடைக்கும்.

எல்லாப் பொதுத் துறை வங்கிகளிலும் ஆர்.டி கணக்கைத் தொடங்கலாம். கணக்குத் தொடங்க முன்பணம் செலுத்த வேண்டியதில்லை. மாதம்தோறும் அந்தத் தொகையைத் தவறாமல் செலுத்த வேண்டும். சேமித்த பணத்தை எக்காரணம் கொண்டும் இடையில் எடுக்கக் கூடாது.

மூச்சு முட்டுதா கல்வி கட்டணம்?

மியூச்சுவல் ஃபண்ட்!

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் சேமிக்கலாம். இதில், இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள். இன்னொன்று, பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள். ஐந்தில் இருந்து 10 ஆண்டுகள் கழித்து முதலீடு செய்த பணம் திரும்ப வேண்டும் என்று நினைக்கிறவர்கள் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். ஆறு மாதங்கள் முதல் ஓர் ஆண்டுக்குள் சேமித்த பணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று நினைக்கிறவர்கள் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதற்கு, தமிழகத்தில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை விநியோகம் செய்யும் நிறுவனங்களை முதலில் விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். அவைகளை அணுகி, கடன் சார்ந்த நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் எவை என்பதைக் கேட்டறிந்து அதில் சேமிக்கலாம். வங்கி ஆர்.டி-யைப்போல, இதிலும் எஸ்.ஐ.பி (Systematic Investment Plan- SIP) பிளான் மூலம் மாதம் ஒன்றுக்கு 2,500 ரூபாய் சேமிக்கலாம். வங்கி ஆர்.டி-யில் சேமிக்கும் பணத்துக்கு அதிகபட்சமாக 8 சதவிகிதம் வட்டி கிடைக்கும். ஆனால், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் 8 சதவிகிதம் முதல் 9 சதவிகிதம் வரை வருமானம் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், பெரும்பாலான சமயங்களில் முதலுக்கு மோசம் வராது. ஆனால், சில சமயங்களில் முதல் கொஞ்சம் குறைய வாய்ப்புண்டு.

மூச்சு முட்டுதா கல்வி கட்டணம்?

கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தேர்வு செய்யும்போது லிக்யூட் ஃபண்ட் அல்லது அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளைத் தேர்வு செய்வது அவசியம். இந்தத் திட்டங்களில் முதலீடு செய்யப் போகிறீர்கள் எனில், இதுபற்றி நன்கு விஷயம் தெரிந்த ஒரு நிபுணருடன் கலந்து ஆலோசித்துவிட்டு முடிவு செய்யவேண்டும். மேலும், பள்ளிக்கல்விக் கட்டணத்தை தாய், தந்தை ஆகிய இருவருமே தொடங்கலாம். எனினும், தாயின் பெயரில் தொடங்குவது நல்லது. காரணம், தந்தையின் வருமானம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் வரி கட்டவேண்டி வரும். இதனால் கல்விக் கட்டணத்துக்காகச் சேமிக்கும் தொகையில் இருந்து கிடைக்கும் வட்டிக்கும், அவர் வரி கட்டவேண்டி இருக்கும். மாதச் சம்பளம் பெறாத அம்மாவாக இருப்பின், அவர்கள் கணக்குத் தொடங்கி பணத்தைச் சேமிக்கும்போது அவர்கள் வரி கட்டவேண்டிய நிர்பந்தம் இருக்காது.’’

மூச்சு முட்டுதா கல்வி கட்டணம்?

இவ்வாறாக சேமிப்பதும் சிரமம் என்று கருதும் பெற்றோர்களுக்கு வேறு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பது... மற்றொன்று,  அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே பள்ளிகள் வாங்க வேண்டும் என்று மற்ற பெற்றோர்களையும் திரட்டி பள்ளியை முற்றுகையிடுவது.

- ஏ.ஆர்.குமார்
படங்கள்: ஆ.முத்துக்குமார்