Published:Updated:

சரண்யா ஐ.ஏ.எஸ்.

சரண்யா ஐ.ஏ.எஸ்.
பிரீமியம் ஸ்டோரி
சரண்யா ஐ.ஏ.எஸ்.

முகங்கள்

சரண்யா ஐ.ஏ.எஸ்.

முகங்கள்

Published:Updated:
சரண்யா ஐ.ஏ.எஸ்.
பிரீமியம் ஸ்டோரி
சரண்யா ஐ.ஏ.எஸ்.

ரண்யாவுக்கு ஒரு சல்யூட் வைக்க வேண்டும். இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் ஏழாவது இடத்தையும் தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்து பெருமை சேர்த்துள்ள சரண்யாவுக்கு கடந்த ஆறாம் தேதி திருமணம் முடிந்தது. ஐ.ஏ.எஸ் பணிக்குத் தேர்வானதற்கும், அவரின் திருமணத்துக்கும் வாழ்த்துச் சொல்லி அவரிடம் பேசினோம்.

‘‘ எப்படிச் சாதித்தீர்கள் சரண்யா?”

‘‘ஒரு நாளைக்கு 13 மணி நேரம் வரை படிப்பேன். திட்டமிட்டுப் படித்தேன். படிக்கின்ற நேரத்தில் செல்போனில் பேசுவது, தொலைக்காட்சி பார்ப்பது போன்றவற்றை முற்றிலும் தவிர்த்துவிட்டேன். பாடத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்தினேன்.’’

சரண்யா ஐ.ஏ.எஸ்.

‘‘தேர்வு எழுதுபவர்களுக்கு நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் என்ன?’’

‘‘படிப்பதற்கான திட்டமிடலை முதலில் வகுக்க வேண்டும். அன்றைய செய்தித்தாள்களைக் கட்டாயம் வாசிக்க வேண்டும். நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பாடத்திட்டங்களையும் நன்றாக படிக்க வேண்டும். யு.பி.எஸ்.சி இணையதளத்தில் அதற்கான பாடத்திட்டங்கள் உள்ளன. அதைப் படித்தாலே போதுமானது. பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிக்க  வேண்டும் என்று அவசியமில்லை. ஆனாலும், பயிற்சி நிறுவனங்களில் உள்ளவர்களின் அனுபவங்கள் நமக்குக் கைகொடுக்கும். எனவே, பயிற்சி எடுத்தால் சிறப்பாக இருக்கும்.’’

‘‘தோல்வி அடைபவர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?’’

‘‘நான்கு முறை தேர்வுகள் எழுதித்தான் நான் வெற்றி பெற்றேன். ஒவ்வொரு முறையும் தோல்வி அடைந்தபோது  நானும் துவண்டு போயிருக்கிறேன். கடினமாய் உழைத்தும் தோல்வி அடைந்துவிட்டோமே என்று அழுதிருக்கிறேன். எதையும் கடினமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தெரியாத விஷயங்கள்  நிறைய இருக்கின்றன. அதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு நாம் படிக்க வேண்டும். ஒவ்வொரு நாளையும் டார்கெட் வைத்துக்கொண்டு படிப்பது நல்லது. தேர்வுகள் மட்டுமே நம் அறிவை முடிவு செய்யாது என்ற எண்ணம் இருக்க வேண்டும். ஆனாலும், அதை நான் கடந்து செல்வேன் என்ற எண்ணத்தை நமக்குள்  விதைக்க வேண்டும். கடந்த முறை செய்த தவற்றை மீண்டும் செய்யக் கூடாது என்று உறுதியுடன் செயல்பட வேண்டும்.’’ 

சரண்யா ஐ.ஏ.எஸ்.

‘‘இனி,  உங்களுடைய கவனம் எதில் இருக்கும்?’’

‘‘நான் சமூகவியல் பாடத்தை எடுத்திருந்ததால் அதில் பெண்கள், குழந்தைகள் குறித்தும் அவர்கள் மீதான தாக்குதல் குறித்தும் அதிகமாகப் படித்திருந்தேன். அதனால், அவர்களுடைய நலனில் கவனம் செலுத்துவேன். ‘பெண்கள் மீதான தாக்குதல் ஆண்களால்தான் நடக்கிறது’ என்று ஒரு தனிப்பட்ட நபரை மட்டும் நாம் கைகாட்ட முடியாது. ஒட்டுமொத்த சமூகத்தையே மாற்ற வேண்டும். அதற்கு, வருகிற தலைமுறையினர் எண்ணங்களில் மாற்றங்களை விதைக்க வேண்டும். முதலில் குறுகிய காலத்தில் சில இடங்களில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். முதலில் சமூகத்தின் தெருவுக்கு அவர்களைக் கொண்டு வந்துவிடும் குடும்ப உறுப்பினர்​களிடையே  விழிப்பு உணர்வைக் கொண்டு வரவேண்டும். பிறகு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர் கலந்துரையாடல் மூலம் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். ஆசிரியர்கள் சொல்வதை அப்படியே எடுத்துக்கொள்ளும் மாணவர்கள் இருக்கிறார்கள். எனவே, ஆசிரியர்-மாணவர்கள் இடையிலான கலந்துரையாடலில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். பெண்களிடத்தில் விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதலுக்குப் பொருளாதாரப் பின்னடைவும் ஒரு காரண​மாக உள்ளது. பொருளாதாரத்தில் அவர்களை வலிமை உள்ளவர்களாக மாற்ற வேண்டும். அதற்கான திட்டங்கள் நடைமுறைப்​படுத்தப்பட வேண்டும். இந்த வழியில் எனது பயணம் இருக்கும்.’’

- கே.புவனேஸ்வரி