Published:Updated:

`ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய கட்சிகளில் இன்று ஒன்றுகூட இல்லை!’ வைகோ

`ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய கட்சிகளில் இன்று ஒன்றுகூட இல்லை!’ வைகோ

`ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய கட்சிகளில் இன்று ஒன்றுகூட இல்லை!’ வைகோ

`ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய கட்சிகளில் இன்று ஒன்றுகூட இல்லை!’ வைகோ

`ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய கட்சிகளில் இன்று ஒன்றுகூட இல்லை!’ வைகோ

Published:Updated:
`ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய கட்சிகளில் இன்று ஒன்றுகூட இல்லை!’ வைகோ

"தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு ஒருபோதும் அமைக்காது. தமிழகத்தைத்  தொடர்ந்து வஞ்சிக்கும் வேலையில் மத்திய அரசின் மற்றொரு நடவடிக்கைதான் காவிரி நதிநீர் மேற்பார்வை குழு அறிவிப்பு" என்று ம.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.


 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகில் உள்ள பாண்டிகுடி கிராமத்தில் இன்று காலையில் நடைபெற்ற ம.தி.மு.க ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காகப் பொதுச் செயலாளர் வைகோ வந்திருந்தார். முன்னதாகப் புதுக்கோட்டை நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "காவிரி மேலாண்மை வாரியத்தை ஒருபோதும் மத்திய அரசு அமைக்காது. இதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்தபோதே நான் கூறிவிட்டேன். 265 பக்கங்கள் கொண்ட அந்தத் தீர்ப்பை முழுவதுமாகப் படித்துப்பார்த்துதான் அப்படி ஒரு கருத்தைத் திட்டவட்டமாகக் கூறினேன். அதுதான் இன்றைக்கு நடந்திருக்கிறது. அந்தத் தீர்ப்பில் சொல்லப்பட்டதை வைத்து காவிரி மேற்பார்வைக் குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு கூறியிருப்பது, தமிழக மக்களை ஏமாற்றும் வேலை.

மூலக்கொத்தளம் கல்லறை அமைந்திருக்கும் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு அமைவதும், அது ஆதிதிராவிட மக்களுக்குக் கொடுக்கப்படுவதாகத் தமிழக அரசு உத்தரவாதம் அளித்திருப்பதற்கும் நான் எதிர்ப்பு தெரிவித்திருப்பதைத் திசை திரும்புகிறார்கள். ஆதிதிராவிட மக்களுக்கு விரோதமாக நான் செயல்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. இந்த வைகோ எந்தக் காலத்திலும் அந்த மக்களின் நலனுக்கு எதிரான செயல்பட்டவன் கிடையாது. மூலக்கொத்தளம் விவகாரத்தில் யாருக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது போன்ற விசயங்களை நான் வெளிப்படையாக இங்குக் கூற விரும்பவில்லை. இந்த வைகோவை வடசென்னை மக்கள் நன்கு அறிவார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் 26 வருடங்களாக நான் போராடி வருகிறேன். அதை எதிர்த்து வழக்குப் போட்டு நானே வாதாடினேன். அந்தச் சமயத்தில், அதன் அதிபர் ஐந்து நிமிடம் என்னைப் பார்ப்பதற்காக அனுமதி கேட்டிருந்தார். ஒருநிமிடம்கூட அவரைப் பார்க்க முடியாதென்று கூறிவிட்டேன். இதே ஸ்டெர்லைட் ஆலையை மகாராஷ்டிராவில் அமைப்பதற்கு முற்பட்டபோது, அங்கிருக்கும் மக்கள் அதை எதிர்த்தனர். ஆலை அமைவதற்காக அமைக்கப்பட்ட கட்டடங்களின் உள்ளே புகுந்து அடித்து நொறுக்கினார்கள். அன்றைக்கு முதல்வராக இருந்த சரத்பவார் ஆலை அமைவதற்கு அனுமதி மறுத்தார். அதன் பிறகுதான் அவர்கள் தமிழ்நாட்டுக்குள் நுழைந்தார்கள். விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் ஆலை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கிவிட்டது. அதற்கு எதிராகத் தொடர் போராட்டங்கள், பேரணிகள், கண்டன ஆர்ப்பாட்டங்கள், கைது என்று முழு மூச்சுடன் நான் செயல்பட்டிருக்கிறேன். எத்தனையோ கட்சிகள் நாங்களும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கிறோம் என்று வந்தார்கள். இன்றைக்கு அவற்றில் ஒன்றுகூட இல்லை. ஆனால், ம.தி.மு.க தொடர்ந்து களத்தில் இருக்கிறது. இன்றைக்கு அந்த ஆலைக்கு எதிராகத் தூத்துக்குடி மக்கள் திரண்டு தன்னெழுச்சியாகப் போராடுவது மகிழ்ச்சி தருகிறது’’ என்றார்.