கனிமொழியுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு..! | mamata banerjee meet DMK MP kanimozhi at delhi

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (27/03/2018)

கடைசி தொடர்பு:20:40 (27/03/2018)

கனிமொழியுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு..!

தி.மு.க எம்.பி கனிமொழியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.  

மம்தா பானர்ஜி

காங்கிரஸ், பா.ஜ.க-வுக்கு மாற்றாக தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவருமான சந்திரசேகர் ராவ் ஈடுபட்டுள்ளார். அந்தவகையில், சமீபத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்தித்து மூன்றாவது அணிக்கு ஆறுதல் கோரினார். சந்திரசேகர் ராவ் முயற்சிக்கு மம்தா, ஜார்க்கண்ட் முக்தி மோச்சா ஆதரவு அளிக்கவே, அடுத்தாண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு இப்போதிலிருந்தே பரபரப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே, மூன்றாவது அணிக்கு ஆதரவு கோரும் விதமாக மம்தா பானர்ஜி தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். 

அதன்படி, இன்று நாடாளுமன்றத்துக்குச் சென்ற அவர், அங்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா கட்சியின் எம்.பி, சஞ்சய் ராவத் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதேபோல், தி.மு.க எம்.பி கனிமொழியையும் அவர் சந்தித்து மூன்றாவது அணிக்கு ஆதரவு தரும்படி கூறினார். ஏற்கெனவே, இதேகோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில தினங்களுக்கு முன் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினிடம் மம்தா தொலைபேசியில் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க