Published:Updated:

திமுக-காங். அணி வெற்றி உறுதி: கார்த்தி சிதம்பரம்

திமுக-காங். அணி வெற்றி உறுதி: கார்த்தி சிதம்பரம்

சென்னை, பிப்.24,2011

"திமுக - காங்கிரஸ் வெற்றிக் கூட்டணி என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்," என்றார் கார்த்தி ப.சிதம்பரம். ##~~##

செங்கை - சென்னை மாவட்டத்தின் அதிமுக முன்னாள் தொழிற்சங்க தலைவரும், காட்டுப்பள்ளி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான ஜி.ஆதிகேசவர் தனது ஆதரவாளர்களுடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
 
இதன் பிறகு நிருபர்களிடம் கார்த்தி ப. சிதம்பரம் கூறுகையில், "திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றிக் கூட்டணி. கடந்த 2004, 2006, 2009-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இது ஹாட்ரிக் வெற்றி. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணியே வெற்றி பெறும். இதில் யாருக்கும் எந்த  சந்தேகமும் வேண்டாம்.

தொகுதி உடன்பாடு பற்றிய முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு கொண்டு சென்றுள்ளார். திமுக சொல்லிய கருத்து சோனியா காந்தியிடமும் தெரிவிக்கப்பட்டு விட்டது. 2வது கட்ட பேச்சில் சமுகமான முடிவு எட்டப்படும்," என்றார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு