Published:Updated:

மரங்களை வெட்டிச் சாய்க்கவந்த எந்திரங்கள்... கட்டிக் காப்பாற்றிய மனித உள்ளங்கள்!

மரங்களை வெட்டிச் சாய்க்கவந்த எந்திரங்கள்... கட்டிக் காப்பாற்றிய மனித உள்ளங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
மரங்களை வெட்டிச் சாய்க்கவந்த எந்திரங்கள்... கட்டிக் காப்பாற்றிய மனித உள்ளங்கள்!

சூழல்பவா செல்லதுரை

மரங்களை வெட்டிச் சாய்க்கவந்த எந்திரங்கள்... கட்டிக் காப்பாற்றிய மனித உள்ளங்கள்!

சூழல்பவா செல்லதுரை

Published:Updated:
மரங்களை வெட்டிச் சாய்க்கவந்த எந்திரங்கள்... கட்டிக் காப்பாற்றிய மனித உள்ளங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
மரங்களை வெட்டிச் சாய்க்கவந்த எந்திரங்கள்... கட்டிக் காப்பாற்றிய மனித உள்ளங்கள்!
மரங்களை வெட்டிச் சாய்க்கவந்த எந்திரங்கள்... கட்டிக் காப்பாற்றிய மனித உள்ளங்கள்!

திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையைப் புதுப்பிப்பதாகக் கூறி வனத்தை ஒட்டிய மரங்களை ஈவு இரக்கமின்றி வெட்டுகிறார்கள் என்ற செய்தி சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

“மலை சுற்றும் பாதையைச் சுற்றிலுமுள்ள பல நூறு மரங்கள் ஜே.சி.பி-யால் வேரோடு பிடுங்கிச் சாய்க்கப்படுகின்றன. தங்கள் எதிர்ப்புக் குரலைப் பதிவுசெய்ய விரும்புபவர்கள் மலை சுற்றும் பாதையில் சந்திக்கலாம்” என்ற குறுஞ்செய்தி என்னை அடைந்தபோது இரவு 11 மணி. ஓர் அரசால் எப்படி எந்த முன்யோசனையும் இன்றி ஒரே உத்தரவில் இயற்கை இந்தப் பூமிக்குக் கொடுத்த இத்தனைப் பெரிய வரத்தை அழித்துவிட முடிகிறது? ஐந்தரை மணிக்கு எழுந்து என் பைக்கில் சமுத்திர ஏரிக்கரை வழியே மலை சுற்றும் பாதையை அடைந்தபோது 100-க்கும் மேற்பட்ட மனிதர்கள் அங்கே குழுமியிருந்தார்கள். எல்லோர் முகங்களிலும் தூக்கமின்மையும், துக்கமும், சோகமும் பதிந்திருந்தன.

இரவில் முறித்துப் போடப்பட்ட, பசும் மரங்களின் வேர்கள் செத்த மாடுகளைப்போலக் கிடந்தன. ஏழு மணிக்குள் அங்கு கூடியவர்களின் எண்ணிக்கை 150-ஐத் தாண்டியது. 10 மணிக்கு கலெக்டர் இது விஷயமாக எங்களைப் பேச அழைத்திருக்கிறார் என்பதே சிறு ஆறுதல் செய்தியாக இருந்தது. தன் வேட்டையைத் தொடங்க மஞ்சள் நிற அரக்கனைப்போல ஒரு ஜே.சி.பி எந்திரம் உறுமியது. கலெக்டர் எங்களுடன் பேசும்வரை எந்தத் தாவரத்தையும் தொட வேண்டாம் என அதன் ஓட்டுநரிடமும், மேற்பார்வை யாளரிடமும் தோழமைக் குரல்கள் கோரிக்கை வைத்தன.

திரும்பிப்போன அந்த எந்திரம், தன் எஜமானர்களின் உத்தரவின் பேரில் மூன்று பெருமரங்களை வேரோடு பிடுங்கிப் போட்டது. எங்கள் கண்முன்னே நடந்த இந்தப் படுகொலையை நாங்கள் தடுக்க முற்படும் முன், அவை சவங்களாய் முட்காட்டில் கிடந்தன. நாங்கள் யாருடைய கட்டளைக்கும் காத்திருக்காமல் சாலையில் உட்கார்ந்தோம். அடுத்த 10-வது நிமிடம் போலீஸ் வந்தது. எங்கள் விவாதங்கள் கூடிக்கொண்டே போயின. வார்த்தைகளின் உஷ்ணம் போலீஸையும் நிதானிக்க வைத்தது.

மரங்களை வெட்டிச் சாய்க்கவந்த எந்திரங்கள்... கட்டிக் காப்பாற்றிய மனித உள்ளங்கள்!

எங்கள் கண்ணெதிரே மூன்று மரங்களைப் பிடுங்கிப்போட்ட அந்த இருவரும், தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்கள். 10 பேர் டாக்டர் சீதா தலைமையில் காவலிருக்க, நாங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்திக்கச் சென்றோம்.

தோழர் கருணா, ‘இந்த மரங்கள் எங்கள் நகரத்துக்கு எத்தனை மகத்தான பொக்கிஷங்கள் என்றும், ஓர் அரசு ஆணையில், எப்படி அதைப் பலி கொடுக்கத் துணிந்தீர்கள்’ என்றும் அடிமனதிலிருந்து கேள்விகளை எழுப்பினார். முதல் 10 நிமிடங்களில் தன் தரப்பு நியாயத்தை கலெக்டர் முன்வைத்தார். நாங்கள் எல்லோருமே அதை நிராகரித்தோம்.

விரிவாக்கம் இந்தப் பாதைக்குத் தேவையில்லை என்பதையும் இந்த மரச்செறிவின் குளிர்ச்சிக்கும், பகலிலேயே கவியும் லேசான இருளுக்கும்தான் மனிதர்கள் தங்கள் மனதைப் பறிகொடுக்கிறார்கள் என்றும், அதுவே ஆன்மிக அனுபவம் என்றும் அந்தச் சபையில் பல்வேறு குரல்கள் தடித்தும் மெலிந்தும் விளக்கின. கலெக்டர் எங்கள் குரல்களை உள்வாங்கிக் கொண்டேயிருந்தார். 

‘புதர்களைக்கூட நீக்கக் கூடாதா?’ என்ற நிர்வாகத் தரப்பின் கேள்விக்குக் கவிஞனும் களச் செயல்பாட்டாளனுமான குமார் தன் அனுபவத்திலிருந்து பதில் சொன்னார்.

மரங்களை வெட்டிச் சாய்க்கவந்த எந்திரங்கள்... கட்டிக் காப்பாற்றிய மனித உள்ளங்கள்!

‘நீங்கள் கைவைத்திருப்பது சாலையோரம் நட்டுவைத்து வளர்க்கப்பட்ட புதர் மரங்கள் அல்ல. அது சோணகிரி காடு. மலையின் தொடர்ச்சி. இந்த மலையின் வேர்களில்தான் மரங்கள், செடிகள், கருங்குரங்குகள், உழக்குள்ள நரிகள், பதுங்கு முயல்கள், உடும்புகள் என நூற்றுக்கணக்கான காட்டுயிர்களும், பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிர்களும், நீங்கள் புதர்கள் என்று தவறாய் அடையாளப்படுத்தும் இந்த மூலிகைச் செடிகளைத்தான் வாழ்விடங்களாகப் பாவிக்கின்றன. அவற்றையும் மாடுகளைப்போல் பிளாஸ்டிக் கழிவுகளைத் தின்னவைத்து விடாதீர்கள்’ என்ற வேண்டுகோளுக்கு அப்படி ஓர் அமைதியை அந்த சபை அங்கீகரித்தது.

புகைப்படக் கலைஞன் தேவ்குகையால் பேச முடியவில்லை. விம்மல்கள் மட்டும் தெறித்து விழுந்தன. ஆங்கிலத்தில் அற்புதமான வார்த்தைகளால் 10  நிமிடங்கள் அவர் முன்வைத்த வாதங்கள் யாரையும் புதைகுழியில் அமிழ்த்தும். இதுவரை ஆத்திரத்தோடு அடைகாத்த அத்தனை சொற்களையும் கொட்டித் தீர்த்தார்.

நான்கு நாட்களாக எந்த மரங்களும் வெட்டப்படவில்லை என்ற பொய் எங்கள் முன்னிலையிலேயே அவிழ்க்கப்பட்டது. பல கேமரா பதிவுகளும், சற்றுமுன்னர் எடுக்கப்பட்ட செல்போன் புகைப்படங்களும் பச்சை வாசனையோடு கலெக்டர்முன் காட்சிப் படுத்தப்பட்டன.

மரங்களை வெட்டிச் சாய்க்கவந்த எந்திரங்கள்... கட்டிக் காப்பாற்றிய மனித உள்ளங்கள்!

ஹைவேஸ் இன்ஜினீயர் அவசரத்தில் உள்ளே நுழைந்து தனக்கான இருக்கையை உறுதிப்படுத்திக்கொண்டார். எங்கள் எல்லோர் வார்த்தைகளும் அவரை நோக்கி ஒரே நேரத்தில் திரும்ப, சொல்ல எதுவுமற்று அமைதி காத்தார்.

அவசர அவசரமாகச் சில உத்தரவுகளை கலெக்டர் பிறப்பித்தார்.

‘ஒரு மரத்தையும் இனி வெட்ட வேண்டாம்’. அவர் உத்தரவை இடைமறித்து, ‘நீங்கள் புதர்கள் என்று தப்பாய் விவரிக்கும் மூலிகைச் செடிகளையும்.’

நான் முதல் வரிசையிலிருந்து திரும்பிப் பார்த்தேன். எல்லோருடைய முகங்களிலும் படிந்திருந்த அவநம்பிக்கை மெல்ல பனிக்கட்டி மாதிரி உருக ஆரம்பித்திருந்தது.’’

படங்கள்: கா.முரளி