Published:Updated:

"வீரப்பனை எத்தனை முறை சாகடிப்பீர்கள்?"

"வீரப்பனை எத்தனை முறை சாகடிப்பீர்கள்?"
பிரீமியம் ஸ்டோரி
"வீரப்பனை எத்தனை முறை சாகடிப்பீர்கள்?"

ராம்கோபால் வர்மாவை விளாசும் முத்துலட்சுமி!சர்ச்சை

"வீரப்பனை எத்தனை முறை சாகடிப்பீர்கள்?"

ராம்கோபால் வர்மாவை விளாசும் முத்துலட்சுமி!சர்ச்சை

Published:Updated:
"வீரப்பனை எத்தனை முறை சாகடிப்பீர்கள்?"
பிரீமியம் ஸ்டோரி
"வீரப்பனை எத்தனை முறை சாகடிப்பீர்கள்?"
"வீரப்பனை எத்தனை முறை சாகடிப்பீர்கள்?"

ண்மைக்கும், வெளியே தெரிந்த விஷயங் களுக்கும் இடையே நூலிழைதான் வித்தியாசம். சிறப்புக் காவல் படையினரால் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் பற்றிய செய்திகள் பலவாறாக வந்துகொண்டி ருக்கின்றன.

“இப்போது ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ படம் எனது கணவரை மிகவும் மோசமாகச் சித்தரிக்கிறது. அந்தப் படத்தைத் தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என்று ஆவேசப்படுகிறார் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி. அவரிடம் பேசினோம்.

“ ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ திரைப்படத்தில் என் கணவர் செய்த குற்றங்களை மிகைப்படுத்திக் காட்டி இருக்கிறார்கள். என் கணவர் சந்தனமரம் கடத்தியதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவர் ஒருவரை மட்டுமே குற்றம் செய்தவராக இந்தப் படத்தில் சித்தரித்து இருக்கிறார்கள். சிறப்புக் காவல் படை (எஸ்.டி.எஃப்)  அங்கிருந்த மக்களைச்  சித்ரவதை செய்ததைப் பற்றித் திரைப்படத்தில் எந்த ஓர் இடத்திலும் காட்சிப்படுத்தவில்லை. 2008-ல்  என்னை மும்பைக்கு வரவழைத்து, தான் ஒரு படம் இயக்கவிருப்பதாகவும் அதற்கு வீரப்பன் பற்றிய தகவல்களைத் தரும்படியும் ராம்கோபால் வர்மா கேட்டார். எனவே, என் கணவர் பற்றிய அனைத்துத் தகவல்களையும் ராம்கோபால் வர்மாவிடம் சொன்னேன். அத்தோடு இந்தியில் மட்டுமே படம் எடுக்க உரிமை கொடுத்து இருந்தேன். எனக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் என்னிடம் கையெழுத்து வாங்கிய பத்திரத்தில், நானே அவருக்கு தமிழ், கன்னட, தெலுங்கு உரிமைகளைக் கொடுத்ததைப்போல மாற்றிக்கொண்டிருக்கிறார்.

"வீரப்பனை எத்தனை முறை சாகடிப்பீர்கள்?"

ராம்கோபால் வர்மாவை நம்பி நான் உண்மைச் சம்பவங்களைச் சொன்னதற்குக் காரணம், அவரின் முந்தையப் படங்களில் ஒரு சாமானியன் எதற்காக குற்றச்செயல்களில் ஈடுபடுகிறான் என்பதற்கான பின்புலத்தைக் காட்டி இருந்தார். வீரப்பன், ஒரு சில சூழ்நிலைகளால் எப்படிக் குற்றச்செயலில் ஈடுபட்டார் என்பதுதான் வீரப்பனின் வாழ்க்கையும் வரலாறும். நான் சொன்ன சம்பவங்களைத் தவிர்த்துவிட்டு, ஒரு சார்பாக வீரப்பன் மீதான குற்றங்களை மட்டும் காட்டி எதிர்காலச் சந்ததியினரிடம் அவர் மீதான வெறுப்பை அதிகப்படுத்தப் பார்க்கிறார்கள்.

90 பேர் வீரப்பனிடம் இருந்தார்கள். அதைப் பாதியாய் குறைத்தவர் காவல் துறை அதிகாரி சைலேந்திரபாபு. அதற்குப் பிறகு நட்ராஜ் வந்தார். ஆனால், விஜயகுமார்தான் எல்லாம்  செய்ததைப்போல் படத்தில் காண்பிக் கிறார்கள். உண்மையில், மோரில் மயக்க மருந்தைக் கலந்துகொடுத்து, அவரை ஆம்புலன்ஸில் வரவைத்துத்தான் சுட்டுக் கொன்று இருக்கிறார்கள். இதை நான் பலமுறை சொல்லிவிட்டேன்.

வீரப்பன் தொடர்பான புத்தகங்கள், திரைப்படங்களில் அவரைத் தவறாகவேச் சித்தரித்து இருக்கின்றனர்.  இது எனக்கு  மன உளைச்சலைத் தருகிறது.  அவரின் வாழ்க்கைச் சம்பவங்கள் யாருக்கும் முழுமையாகத் தெரியாது. சில போலீஸ் அதிகாரிகள் சொல்லியதைவைத்து படம் எடுத்து இருக்கிறார் ராம்கோபால் வர்மா. அந்தப் படத்தை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.

"வீரப்பனை எத்தனை முறை சாகடிப்பீர்கள்?"

ஏற்கெனவே செத்துவிட்ட ஒருவரை உங்கள் சுயநலத்துக்காகவும், வியாபார நோக்கத்துக்காகவும் எத்தனைமுறை சாகடிப்பீர்கள்? வீரப்பன் கெட்டவன் என்று சொல்லும் உங்கள் வரலாற்றில் போலீஸ் செய்த கற்பழிப்புகளும், சாமானியர்கள் மீது ஏவப்பட்ட  வன்முறைகளும் ஏன் பதிவு செய்யப்படவில்லை. இதை எல்லாம் எதிர்காலத்தில் படித்தும், பார்த்தும் வீரப்பன்தான் எல்லாக் கொடிய செயல்களையும் செய்தார் என்று கற்பிப்பதற்காகவா? வீரப்பன் தொடர்பான உண்மைக்கதையை விரைவில் எழுதுவேன். அதில் அத்தனை உண்மைகளும் இடம்பெறும்” என்று பொங்கித் தீர்க்கிறார்.

மீண்டும் வீரப்பன் கதை சர்ச்சைக்கு வருகிறது!

- மா.அ.மோகன் பிரபாகரன், படம்: ப.சரவணகுமார்