வெளியிடப்பட்ட நேரம்: 16:44 (03/04/2018)

கடைசி தொடர்பு:16:44 (03/04/2018)

நாளை திருச்சியில் பொதுக்கூட்டம் - வைகை எக்ஸ்பிரஸில் புறப்பட்ட கமல்..!

நாளை திருச்சியில் பொதுக்கூட்டம் - வைகை எக்ஸ்பிரஸில் புறப்பட்ட கமல்..!

நாளை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகக் கமல்ஹாசன் வைகை ரயிலில் திருச்சி புறப்பட்டுள்ளார். 

கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்த பின் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார் கமல்ஹாசன். ஸ்டெர்லைட், ஓ.என்.ஜி.சி-க்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொள்வது என அவரது நடவடிக்கைகள் வேகமாகி வருகின்றன. இந்நிலையில் மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்டத்துக்குப் பிறகு, அடுத்தகட்டமாகத் திருச்சியில் நாளை தனது கட்சியின் மாநாட்டை கமல்ஹாசன் நடத்துகிறார்.

இதற்காக இன்று அவர் திருச்சி புறப்பட்டார். வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கட்சிக்காரர்களுடன் அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக மதியம் 1 மணி அளவில் எழும்பூர் ரயில் நிலையம் வந்த அவரைத் தொண்டர்கள் வழியனுப்பி வைத்தனர். முன்னதாக இந்தப் பயணத்தின்போது சென்னை - திருச்சி இடையில் உள்ள ரயில் நிலையங்களில் அவர் தொண்டர்களைச் சந்திக்க இருப்பதாகவும் இதனால் பொதுமக்கள் அவதிப்படுவர் என்றும் கூறி தென்னக ரயில்வே மேலாளரிடம் சிலர் மனு அளித்த நிலையில், அதை அவர் மறுத்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, மாநாடு நடைபெறவுள்ள இடத்தில் மேடைகள் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்றுவருகிறது. நாளைய தினம் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில், காவிரி பிரச்னைக்காகப் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளைக் கமல் வெளியிடுவார் எனத் தெரிகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க