Published:Updated:

உங்களைப் போலவே வாழ ஆசைப்படுகிறோம்...

உங்களைப் போலவே வாழ ஆசைப்படுகிறோம்...
பிரீமியம் ஸ்டோரி
உங்களைப் போலவே வாழ ஆசைப்படுகிறோம்...

உங்களைப் போலவே வாழ ஆசைப்படுகிறோம்...

உங்களைப் போலவே வாழ ஆசைப்படுகிறோம்...

உங்களைப் போலவே வாழ ஆசைப்படுகிறோம்...

Published:Updated:
உங்களைப் போலவே வாழ ஆசைப்படுகிறோம்...
பிரீமியம் ஸ்டோரி
உங்களைப் போலவே வாழ ஆசைப்படுகிறோம்...
உங்களைப் போலவே வாழ ஆசைப்படுகிறோம்...

நுங்கம்பாக்கம் சுவாதி படுகொலை பற்றிச் சமூக வலைதளங்களில் இன்றளவும் பொங்கிப்பொங்கி பொங்கச்சோறு வைக்கிறோம். இந்தக் கட்டுரை வெளிவரும் நேரத்தில் ஒருவேளை ‘கபாலி’ ட்ரெய்லர் வந்திருந்தால், ஃபேஸ்புக், ட்விட்டர்களில் டிரெண்ட் மாறியிருக்கும்.

தலைநகர் சென்னையில் நடந்த காரணத்தினால்தான் இந்தக் கொலை விஷயம் இணையத்தில் ஒரு வாரத்துக்கும் மேல் தாக்குப் பிடிக்குது. இதே சம்பவம் ஏதோ ஒரு கிராமத்தில் நடந்திருந்தால் செய்தித்தாளில் ஓர் ஓரத்தில் மட்டும் வந்திருக்கும். செய்தி சேனலில் அதிகபட்சம் ஒரு நாளைக்கு இரண்டு முறை ஒளிபரப்பாகி இருக்கும். ஆக, இங்கு சம்பவத்தின் வீரியம் என்பது இடத்தைப் பொறுத்துத்தான் என்பது தெளிவாகிறது.

‘‘ஒருவேளை நான் அந்த இடத்தில் நின்றிருந்தால்...” எனப் பேசுவது எல்லாம் ஒரு ஃபேன்டசி கதை சொல்வதுபோல்தான். ‘இருந்த இடத்தில் இருந்துகொண்டு ஒருத்தணும் காப்பாத்தலை...’ எனக் கூப்பாடு போடுவது அயோக்கியத்தனம். நான் அங்கு இருந்தாலும் என் புத்தி, மனம் எல்லாம் செயலற்றுத்தான் போயிருக்கும். இதற்கு எத்தனை விழிப்பு உணர்வு கொடுத்திருந்தாலும் அந்த நேரத்தில், அதிர்ச்சியில் எதுவும் வேலை செய்யாது. அதுதான் உண்மை.

ஆனால், என் புத்தி கொஞ்சம் சுதாரித்து அவனைத் தப்பிச்செல்லவிடக் கூடாது எனச் சொல்லியிருக்கும். கொலையாளி ஒரு கையில் ஆயுதம் உள்ள எளியவன். நான் வெற்றுத் துணிச்சல் உள்ள நிராயுதபாணி. என்ன செய்ய? சினிமாவில் வருவதுபோல் ஓடிப்போய் அவனைப் பிடிக்கவா? சத்தியமாக என்னால் முடியும் எனப் பொய்கூடச் சொல்ல முடியாது. ஆனால், என்னுடன் நாலு பேர் சேர்ந்திருந்தால் நிச்சயம் முடியும். ஆனால் அவனை நான் பிடிக்கப்போய், என்னுடன் யாரும் வரவில்லை என்றால்... என் நிலை? அங்கிருந்த ஒருவர் சத்தம் போட்டு இருந்தால் நாலு பேர் சேர்வார்கள் என வைத்துக்கொள்வோம். அப்போதும் அதை யார் முதலில் செய்வது என்பதுதான் சிக்கல்.

அங்கே இருந்த மக்களைப் பற்றி மட்டும் குறை சொல்ல முடியாது. காரணம், வெறும் ஆயிரக்கணக்கில் ஆயுதங்களுடன் இருந்த ஆங்கிலேயர்களைப் பார்த்து, கோடிக்கணக்கில் இருந்த  நாம் பயந்து அடிமையாக எத்தனைக் காலம் இருந்தோம்? அந்த அடிமைத்தனம்தான் நம் ரத்தத்தில் ஊறி மரபணு மூலம் நம்மிடத்தில் இருக்கிறது. பரவலாகக் கேட்கப்படும் இன்னொரு கேள்வி, ‘உங்க அக்கா தங்கைக்கு நடந்தா... இப்படித்தான் பார்த்துக்கிட்டு இருப்பீங்களா?’ மேலே சொன்ன அடிமைத்தனம் முத்திப் போச்சுனா, அக்கா தங்கச்சியக்கூட காப்பாத்த முடியாத அடிமைக்கூட்டமா மாறிப்போவோம் என்பது நிச்சயம்’’ என யூடியூப் வீடியோ ஒன்றில் பதிவுசெய்திருந்தார்கள். அதில், எவ்வளவு உண்மை அடங்கியிருக்கிறது என யோசித்துப் பாருங்கள். சாவிலும் சாதி, மதம் பற்றியும், அந்தப் பெண்ணின் ஒழுக்கம் பற்றியும் பேசுவதைவிடக் கேவலம் வேறு என்ன இருக்கப்போகிறது?

அடுத்து... ஒரு பெண்ணின் புகைப்படத்தை எடுத்து மார்ஃபிங் செய்தவன், குற்றவாளியைக் கண்டுபிடிக்க லஞ்சம் கேட்ட போலீஸ் அதிகாரி மீது இந்தச் சமூகம் தவறு சொல்லவில்லை. மாறாக, ‘உன் புகைப்படத்தை ஏன் ஃபேஸ்புக்கில் பதிவுசெய்தாய்?’ என்று கேள்வி கேட்டு அவளைத் தற்கொலைதான் செய்யவைத்தது. மார்ஃபிங் செய்யப் பல வழிகள் உண்டு, முட்டாள் சமூகமே. சுவாதியை ஒருவன் கொலை செய்தான்... வினுப்ரியாவை ஒரு சமூகம் சேர்ந்து கொன்று இருக்கிறது. என்ன வித்தியாசம்?

உங்களைப் போலவே வாழ ஆசைப்படுகிறோம்...

சமீபத்தில், பட்டினம்பாக்கத்தில் திருடனை விரட்டிச் சென்று விபத்தில் இறந்துபோன நந்தினி என... கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் எத்தனைப் பெண்களைக் காவு வாங்கியிருக்கிறது இந்தச் சமூகம்?

எந்தப் பிரச்னைக்கும் போகாமல் இருப்பது தான் பாதுகாப்பு என ஒரு தலைமுறையை வளர்த்துவிட்டீர்கள். போகட்டும்... உங்களிடம் தயவுசெய்து இரண்டு கோரிக்கைகள் வைக்கிறேன். இனிமேல் எந்தச் சுவாதியையும் வார்த்தைகளால் கொல்லாதீர்கள். உங்களுக்குத் தெரிந்த ஒரு பெண் வினுப்ரியாவாக இருந்தால்... அவளிடம், ‘நீ ஏன் போட்டோவை போட்டாய்?’ எனக் கேட்காமல், உடல் இயற்கையானது... அதில், அசிங்கப்பட எதுவும் இல்லை. மார்ஃபிங் செய்பவனும், அதைப் பார்த்து ஷேரிங் செய்பவனும்தான் வெட்கப்படணும் எனப் புரியவையுங்கள். எங்களையும், எங்கள் கனவுகளையும் காப்பாற்றுங்கள். நாங்கள், ஆண்களாகிய உங்களைப்போல வாழவே ஆசைப்படுகிறோம்.

ஃபேஸ்புக், ட்விட்டர் போராளிகளே... களத்திலும் கொஞ்சமேனும் போராடுங்களேன். ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் உங்கள் எழுத்தில் இருக்கும் வீரத்தையும், சமூகப் பொறுப்புகளையும் நிஜத்திலும் காண விரும்புகிறோம்.

பெண்களே... நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். பெண் ஏற்றம், உரிமை எல்லாம் வெறும் சினிமா பாட்டோடு, ஏட்டோடுதான். ஆக, உங்களை நீங்கள் காப்பாற்றிக்கொள்ளத் தற்காப்பு விஷயங்களைத் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள். நாம் தப்பித்துச் செல்ல வேற வழியும் இல்லை!

- கே.அபிநயா