Published:Updated:

"பொண்ணா பிறக்கிறது தப்பில்லை...வாழ்ந்து காட்டணும்!"

"பொண்ணா பிறக்கிறது தப்பில்லை...வாழ்ந்து காட்டணும்!"
பிரீமியம் ஸ்டோரி
"பொண்ணா பிறக்கிறது தப்பில்லை...வாழ்ந்து காட்டணும்!"

நந்தினியால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை!

"பொண்ணா பிறக்கிறது தப்பில்லை...வாழ்ந்து காட்டணும்!"

நந்தினியால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை!

Published:Updated:
"பொண்ணா பிறக்கிறது தப்பில்லை...வாழ்ந்து காட்டணும்!"
பிரீமியம் ஸ்டோரி
"பொண்ணா பிறக்கிறது தப்பில்லை...வாழ்ந்து காட்டணும்!"
"பொண்ணா பிறக்கிறது தப்பில்லை...வாழ்ந்து காட்டணும்!"

ந்தினி உயிரைக் கொடுத்து மது ஒழிப்புப் போராட்டத்துக்கு உயிர் ஊட்டிவிட்டுப் போயிருக்கிறார்.

சென்னையின் தினப்படி வழக்கமாக மாறிவிட்ட செயின் பறிப்பு சம்பவத்தில் உயிரை இழந்தவர் நந்தினி. பட்டினம்பாக்கத்தில் இருந்த டாஸ்மாக் கடைதான் இதுபோன்ற சம்பவத்துக்குக் காரணம் என்று அந்தப் பகுதி மக்கள் போராட்டம் தொடங்கி அதை வீரியத்துடன் நடத்தவும் இவரது மரணம் மறைமுகக் காரணம் ஆகிவிட்டது.

நந்தினியின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. தந்தை வடிவேல் பெயின்டராக  வேலைபார்த்து வருகிறார். அவருடைய வருமானம் போதாமல், வீட்டு வேலை செய்து நந்தினியைப் படிக்க வைத்து உள்ளார், தாய் செல்வி. அம்மாவின் கஷ்டத்தை இளம் வயதிலேயே புரிந்துகொண்ட நந்தினி பொறுப்புள்ள மகளாக வளர்ந்துள்ளார். பெற்றோரும், தம்பி விக்னேஷும் தான்  தன் உலகம் என வளர்ந்த அவர், 12-ம் வகுப்பில் 900 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். பின்னர், பி.சி.ஏ படிப்பை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் படித்துள்ளார். தொலைதூரக் கல்வியில் எம்.சி.ஏ படித்துக்கொண்டு தனியார் சி.பி.எஸ்.சி பள்ளி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். வறுமையைக் கடக்க இந்த வேலை உதவியது. சம்பளப் பணத்தை எடுக்கச் சென்றபோதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. நந்தினியிடம் இருந்து பணத்தைப் பறித்த திருடனைப் பிடிக்க இவர்கள் போய், அவர் இவர்களது வாகனத்தைத் தட்டிவிட்டதால் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு நந்தினி இறந்துபோனார்.

அவருடன் கொள்ளையனைத் துரத்திச் சென்றதால் காயம்பட்ட நந்தினியின் அத்தை மகள் நஜ்ஜு நடக்க முடியாமல், உட்கார முடியாமல் இருக்கிறார்.

"பொண்ணா பிறக்கிறது தப்பில்லை...வாழ்ந்து காட்டணும்!"

‘‘வண்டியில போனப்போ அக்கா பேசிக்கிட்டே வந்தாங்க. ‘அடுத்த பிறவியில பெண்ணாவே பிறக்கக் கூடாதுக்கா’னு நான் சொன்னேன். அதுக்கு, ‘பொண்ணா பொறக்கறது தப்பில்லை... சிறப்பா வாழ்ந்துகாட்டணும். நீ ஒண்ணும் கவலைப்படாதே. நல்லா படி. என்னோட ஸ்கூலில் வேலை வாங்கித் தர்றேன்’னு சொன்னாங்க. ‘சாவறதுக்கு ரெண்டு நிமிஷம் ஆகாது. வாழ்ந்து காட்டறது ரொம்பக் கஷ்டம்’னு அக்கா அடிக்கடி சொல்வாங்க. எப்போதுமே, ரொம்பத் தன்னம்பிக்கையோட இருப்பாங்க. நிறையப் புத்தகங்கள் படிப்பாங்க. என்னையும் படிக்கச் சொல்வாங்க. அவங்க என்னைவிட்டு எங்குமே போனதில்லை. எந்த நிவாரணமும் என் அக்காவைத் திருப்பித் தராது” என்று உடைந்து அழுதார்.

நந்தினியின் தந்தை வடிவேலு, “எங்க குடும்பத்தையே தாங்கிப்பிடிச்சது நந்தினிதான். ‘மேல் வீடு கட்டித் தர்றேன். அதுல வரும் வாடகையை உங்க எதிர்காலத்துக்கு வெச்சுக்கோங்க. நான் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போனாக்கூட, நீங்கள் யார்கிட்டேயும் போய் நிக்கக் கூடாது’னு சொல்லிட்டுத்தான் ஏ.டி.எம்-க்கு எம்புள்ள போச்சு. எவ்வளவு பிரச்னை இருந்தாலும் எம்புள்ள கவலைப்பட்டதே இல்லை. நந்தினி தைரியத்துலதான் நாங்க வாழ்ந்துகிட்டு இருந்தோம். இனிமே என்ன செய்யப்போறோம்னு தெரியலை” என்று கதறினார்.

மகளைப் பறிகொடுத்த சோகத்தில் பெற்றோர் மூழ்கியிருக்க, நந்தினியின் உயிர் போவதற்குக் காரணமான டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்று கடல் அறக்கட்டளை அமைப்பினர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த அமைப்பின் தலைவர் ஆக்னஸிடம் பேசினோம். “இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை இருப்பதால்தான், சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நந்தினியின் சாவுக்கும் இதுதான் காரணம். எங்கள் போராட்டத்தால் தற்போது, அந்த டாஸ்மாக் கடையைத் தற்காலிகமாக மூடியுள்ளனர். அதை, நிரந்தரமாக மூடவேண்டும்” என்றார்.
ஒரு கடையை மூட ஒரு பெண் கண்மூட வேண்டி உள்ளதுதான் சோகத்தின் உச்சம்.

- கே.புவனேஸ்வரி
படங்கள்: மா.பி.சித்தார்த்