Published:Updated:

மிட்டாய் கடை

மிட்டாய் கடை
பிரீமியம் ஸ்டோரி
மிட்டாய் கடை

மிட்டாய் கடை

மிட்டாய் கடை

மிட்டாய் கடை

Published:Updated:
மிட்டாய் கடை
பிரீமியம் ஸ்டோரி
மிட்டாய் கடை

லந்து மிட்டாய்

மக்கு இருக்குற 1,008 கேள்விகளோடு ‘வைகோ ஏன் பச்சைத் தலைப்பாகையை கழட்டிவிட்டார்’ன்ற கேள்வியும் சேர்ந்து நம்மளைப் பார்த்து கெக்கபுக்கேனு சிரிச்சுகிட்டு இருக்கு. அதுக்கு என்ன பதிலா இருக்கும்னு நான் சொல்றேன்.

ஜி.கே.வாசனும், விஜயகாந்த்தும் கூட்டணியில் இருந்து மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கிளம்பும்போது, அவர்களது  மூட்டைக்குள் தவறுதலாக போயிருக்கும். ஆங்...

கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராய் கழண்டுபோய் கொண்டிருப்பதைப் பார்த்து கண்கலங்கிய ம.ந.கூ தலைவர்கள், கண்களைத் துடைக்கத் துண்டை ‘டர்’ எனக் கிழித்து கர்சீஃபாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

மிட்டாய் கடை

துண்டைக் கழட்டியதிலும் ஏதாவது ராஜதந்திரம் ஒளிந்திருக்கும். அதைப் பற்றி இன்னும் ஏழு மாதங்கள் கழித்து அறிக்கைவிட்டாலும் விடுவார்.

நினைத்த வேலை முடிந்திருக்கும். அதனால் ‘பாபா’ படத்தில் வரும் ரஜினிகாந்த் போல் கட்டை அவிழ்த்திருப்பார். கதம் கதம்... முடிஞ்சது முடிஞ்சு போச்சு...

‘அடிக்குற வெயிலைச் சமாளிக்கத்தான் துண்டு கட்டியிருக்காப்டி’ என அப்போது சிலர் சொன்னார்கள். அது உண்மையெனில் இப்போதான் வெயில் காலம் முடிஞ்சுடுச்சே... அதனால் கழட்டியிருப்பார்.

‘நல்ல வேலை தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு’ என நினைத்துக் கழட்டி வைத்திருப்பார். ஆனால், அப்படி நினைக்கும் அளவுக்கு என்ன நடந்திருக்கும்னுதான் தெரியலை... சீக்கிரமே கண்டுபிடிக்கிறேன்.

இல்லைனா, அன்னைக்கு வீட்டிலேயே மறந்துவைத்துவிட்டு வந்திருப்பார். செய்தியாளர்கள் கேட்டதும்தான் அவருக்கே ஞாபகம் வந்திருக்கும். அதனால்தான் அதிர்ச்சியாகி அதைப் பற்றி வாயைத் திறக்காமல் கிளம்பிவிட்டார்.

எல்லாத்துக்கும் மேல அந்தத் துண்டு கிழிந்துபோயிருக்கும். வேறு துண்டு இனிதான் வாங்குவார். இதையெல்லாம் வெளியே சொல்லிக்கிட்டு இருக்க முடியுமாங்கிறேன். இவ்வளவு ஏன்? கிரேக்கத்தில்கூட இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கு.

மிட்டாய் கடை

- ப.சூரியராஜ்