நாளை மீண்டும் அனைத்துக்கட்சிக் கூட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு!

நாளை மீண்டும் அனைத்துக்கட்சிக் கூட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தலைமையில் தி.மு.க-வினர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். 

ஸ்டாலின்

மத்திய அரசைக் கண்டித்து, காவிரிக்கான போராட்டங்கள் நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் தீவிரமடைந்து வருகிறது. மறியல், ஆர்ப்பாட்டம் என அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கிடையே, இன்றும் காவிரி மேலாண்மை வாரியம் கோரி தி.மு.க-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை சேப்பாக்கத்தில் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ தலைமையில் நூற்றுக்கணக்கான தி.மு.க-வினர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். 

இதேபோல், சென்னை ஆலந்தூர், திருச்சி, நாமக்கல் என தமிழ்நாட்டின் முக்கிய பகுதிகளில் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் மறியல் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், ``காவிரி தொடர்பாக ஆலோசிப்பதற்காக நாளை தி.மு.க சார்பில் மீண்டும் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும். காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு நாடகமாடுகின்றன. காவிரி மீட்புப் பயணம் பற்றி அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!