காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள் - கமல்ஹாசன் | We Asked For Cauvery but We Get Anna University VC From Karnataka Says KamalHaasan

வெளியிடப்பட்ட நேரம்: 13:44 (06/04/2018)

கடைசி தொடர்பு:13:44 (06/04/2018)

`கேட்டது தண்ணீர்; கிடைத்தது துணைவேந்தர்' - கமல்ஹாசன் ட்வீட்!

`கேட்டது தண்ணீர்; கிடைத்தது துணைவேந்தர்' - கமல்ஹாசன் ட்வீட்!

`கர்நாடகாவிலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள்’ என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கமல்ஹாசன்

காவிரி விவகாரம், ஸ்டெர்லைட், நியூட்ரினோ திட்டம் போன்ற பிரச்னைகளுக்கு மத்தியில் தமிழகத்தின் புதிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம். நீண்ட இழுபறிகளுக்கு இடையே சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராகக் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்து நேற்று ஆளுநர் உத்தரவிட்டார். தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையே காவிரி விவகாரம் தொடர்பான பிரச்னைகள் உச்சத்தில் நடந்துகொண்டிருக்கும்போது ஆளுநரின் துணைவேந்தர் நியமனம் தமிழகத்தில் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி துணைவேந்தராகக் கொல்கத்தாவைச் சூரியநாராயண சாஸ்திரி சமீபத்தில் நியமிக்கப்பட்ட விவகாரம் தீருவதற்குள் மீண்டும் வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழகப் பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கு ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் சூரப்பா நியமனத்துக்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ``கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா. இல்லை உணரத் தேவையில்லை என எண்ணிவிட்டார்களா. சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது'' எனப் பதிவிட்டுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க