`40 ஆண்டுகளுக்கு முன் நினைத்திருந்தால் உங்களின் நிலைமை?' - ரஜினியைச் சீண்டும் தமிழிசை!

`40 ஆண்டுகளுக்கு முன் நினைத்திருந்தால் உங்களின் நிலைமை?' - ரஜினியைச் சீண்டும் தமிழிசை!

காங்கிரஸ், தி.மு.க ஆட்சியில் மறுக்கப்பட்ட காவிரியைக் கொண்டுவரப்போவது பா.ஜ.க தான் என தமிழிசை பேசியுள்ளார்.

தமிழிசை

காவிரிப் பிரச்னை தமிழகத்தில் தீவிரமாகியுள்ள நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை அண்ணா பல்கலைக்கழகத்  துணைவேந்தராக நியமிக்கப்பட்டது சரியல்ல என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் பா.ஜ.க தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து கூறியுள்ளார். சென்னை வேளச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழிசை,  ``சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள், கன்னடர் ஒருவர் நடிப்பதைப் பார்க்க மாட்டோம் என நினைத்திருந்தால் நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்க முடியாது. வந்தாரை வாழவைக்கும் தமிழகம், திறமை யாரிடம் இருந்தாலும் பெற்றுக்கொள்ளும். இதில், மத்திய அரசுமீது குறை சொல்வது கேலிக்கூத்து. 

ராணுவமே வந்தாலும் அஞ்ச மாட்டோம் என நடிகர் சத்யராஜ் பேசுகிறார். ஐ.டி ரெய்டு வந்தால் தெரியும் அவர்கள் பயப்படுவது. காவிரி விவகாரத்தில் துரோகம் செய்துவிட்டு கைதானார் ஸ்டாலின். தியாகம் செய்துவிட்டு கைதாகவில்லை. பிரதமர் வருகைக்குக் கறுப்புக்கொடி காட்டும் ஸ்டாலின், தமிழினத் துரோகி. காங்கிரஸ், தி.மு.க ஆட்சியில் மறுக்கப்பட்ட காவிரியைக் கொண்டுவரப்போவது பா.ஜ.க தான். காவிரியைக் கொண்டுவர அவகாசம் தேவைப்படுவதால், அதுவரை ஸ்டாலின் சிறையில் இருக்கட்டும்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!